1. செய்திகள்

SWIGGY டெலிவரி ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்- கோரிக்கை என்ன?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
SWIGGY delivery employees in Tamil Nadu are on strike from today

தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம்(CITU) சார்பாக இன்று முதல் தமிழகத்தில் உள்ள SWIGGY ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார்கள்.

கடந்த ஒரு வருடமாக ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக பல்வேறு போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்திய நிலையிலும் இதுவரை பேச்சுவார்த்தை மற்றும் கோரிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க SWIGGY நிறுவனம் முன் வரவில்லை. ஆதலால் வேறு வழியின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஊழியர்கள் முடிவெடுத்துள்ளனர்.

SWIGGY டெலிவரி செய்யும் ஊழியர்களின் முழு கோரிக்கை விவரம் பின்வருமாறு-

  • அனைத்து ஊழியர்களுக்கும் பழைய pay- out முறையை வழங்க வேண்டும்.
  • புதிய ஸ்லாட் முறையை திரும்ப பெற வேண்டும்.
  • சீனியர் DE-களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த மாத ஊக்க தொகையை மீண்டும் வழங்க வேண்டும்.
  • ஏற்கனவே வழங்கி வந்த Turn over ஊக்க தொகையை மீண்டும் வழங்க வேண்டும்.
  • ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10 வழங்க வேண்டும்.
  • ஒரு ஆர்டருக்கு மினிமம் ரூ.30 வழங்க வேண்டும்.
  • பேட்ச் ஆர்டருக்கு ரூ.20 வழங்க வேண்டும்.
  • காத்திருப்பு கட்டணத்தை ஆர்டர் தொகையுடன் இணைக்காமல் தனியாக வழங்க வேண்டும்.
  • SWIGGY order வேறு எந்த கம்பெனிக்கும் கொடுக்க கூடாது. SWIGGY DE களுக்கு மட்டுமே கொடுக்கவேண்டும்.
  • First mile ஆர்டருக்கு முழுமையான கட்டணத்தை வழங்க வேண்டும்.
  • முறையான காரணம் இல்லாமல் அபராதம் விதிக்க கூடாது.
  • ரெஸ்டாண்டுகளில் உணவு ரெடியாகும் முன்பே உணவு ரெடி என்று கொடுத்துவிட்டு நீண்ட நேரம் கழித்து உனவு கொடுப்பதை சரி செய்ய வேண்டும். அப்படி நேரம் கழித்து கொடுக்கும் உணவுகளுக்கு DE கள் மீது காரணம் சொல்லி அபராதம் போடக் கூடாது.
  • ரெஸ்டாண்டுகளில் உணவு இல்லை என்றால் ஆர்டர் Reject போடாமல் உணவு கேன்சல் மட்டுமே செய்யப்பட வேண்டும். வழங்க வேண்டும்.
  • ரெஸ்டாண்டுகளில் DE களுக்கு வாகணம் நிறுத்தும் வசதி தருவதோடு உரிய மரியாதையை உறுதி படுத்த வேண்டும். மனித உரிமை மீறல்களில் ஈடுபடக்கூடாது.
  • முன்பு இருந்தது போல நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 Reject க்கு அனுமதி வழங்க வேண்டும்.
  • Wrong location தூரத்திற்கு டெலிவரி கொடுத்தவுடன் Pay-out வழங்க வேண்டும்.
  • கஸ்டமர் ரெஸ்பான்ஸ் இல்லை என்றால் அதிகபட்சம் 15 நிமிடத்தில் ஆர்டர் கேன்சல் செய்யப்பட வேண்டும்.
  • Last mile- க்கு சரியான கிலோ மீட்டர் வழங்கப்பட வேண்டும்.
  • DE-களுக்கு விபத்து நடந்தால் சம்பந்தப்பட்ட Fleet manager உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட DE-களுக்கு Swiggy செலவில் தேவையான மருத்துவம், Insurance சம்பந்தப்பட்ட உதவிகளை செய்ய வேண்டும்.
  • Instamart-ல் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும்.
  • Instamart-ல் காத்திருப்பு கட்டணத்தை வழங்கிட வேண்டும்.
  • Instamart-ல் Bulk order களுக்கு உணவு ஆர்டருக்கு வழங்குவது போல் Auto அல்லது Taxi கட்டணத்தை வழங்கிட வேண்டும்.
  • Instamart-ல் ஆர்டர் பொருட்களை வழங்காமல் அதற்கு முன்பு பிக்கப் செய்து கஸ்டமரிடம் போன் செய்து கொடுத்தால்தான் ஆர்டர் பொருள்கள் வழங்கப்படும் என்று மிரட்டுவதை நிறுத்த வேண்டும்.
  • சில வருடங்களுக்கு முன்பு வெயில் காலங்களில் கொடுத்தது போல் அதன் பலன்களை வழங்கிட வேண்டும்.
  • மழை பெய்யும் போது Rain charge ஒரு ஆர்டருக்கு ரூ 25 வழங்கிட வேண்டும்.
  • T Shirt 3 மாதங்களுக்கு ஒன்றும், Bag 11 மாதங்களுக்கு ஒன்றும் கட்டாயம் வழங்கிட வேண்டும்.
  • DE களுக்கு SWIGGY கிச்சன்களில் பாத்ரூம் வசதி மற்றும் போன் சார்ஜர் வசதி செய்து தரப்பட வேண்டும்.
  • கஸ்டமர் கேர்களில் தமிழில் மட்டுமே பேச வேண்டும்.
  • ஒவ்வொறு வாடிக்கையாளரும் எங்களது சர்வீஸ்க்கு வழங்கும் ஸ்டார் ரேட்டிங் எங்களது போன்களில் டிஸ்ப்ளேயில் தெரிய வேண்டும்.
  • DE- களுக்கு விரோதமாக நடந்து கொள்ளும் Fleet manager களை திரும்ப பெற்று வேறு Fleet manager களை நியமிக்க வேண்டும்.

தற்போது அனைத்து பெரும்பாலான மெட்ரோ நகரங்களிலும், உணவுத்தேவைக்காக SWIGGY பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உருவாகி உள்ளது.

மேலும் காண்க:

2000 ரூபாயினை வங்கியில் மாற்ற அடையாள அட்டை வேணுமா? SBI விளக்கம்

English Summary: SWIGGY delivery employees in Tamil Nadu are on strike from today Published on: 22 May 2023, 11:53 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.