1. செய்திகள்

தமிழ்நாடு, அரிசி மற்றும் மருந்துகளை இலங்கைக்கு அனுப்பியது

Poonguzhali R
Poonguzhali R
Tamil Nadu sent rice and medicines to Sri Lanka

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், இலங்கைக்கான முதல் நிவாரணப் பொருட்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை துறைமுகத்தில் இருந்து 9,000 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 24 டன் அத்தியாவசிய மருந்துகள் ஏற்றிச் செல்லும் கப்பலை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிவாரணப் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.45 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, தமிழகம் 40,000 டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை இலங்கைக்கு தொகுப்புகளாக அனுப்பும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மனிதாபிமான அடிப்படையில் நன்கொடை வழங்குமாறும், இதனால் தேவையான பொருட்களை இலங்கைக்கு வாங்கி அனுப்புமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உணவு மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிக்குமாறு, மத்திய அரசை வலியுறுத்தி ஏப்ரல் 29 அன்று தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்னோடியாக கொண்டு வந்த செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், “இலங்கையின் வளர்ச்சியை அண்டை நாட்டின் உள்நாட்டு பிரச்னையாக பார்க்க முடியாது என்றும், மனிதாபிமான உதவியை வழங்க வேண்டும் என்றும் கூறினார். அதே நேரத்தில் செய்யும் உதவி உடனடியாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

சட்டமன்றத் தீர்மானத்திற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், அரசாங்கம் என்ற அடிப்படையில் இலங்கை நாடு, நிவாரணத்தை ஏற்றுக் கொள்ளும் என்று கூறினார். “வெளியுறவுச் செயலர், தமிழக தலைமைச் செயலாளரிடம் பேசி, ஏப்ரல் 16ஆம் தேதி, இலங்கை அரசு மனிதாபிமான ஆதரவிற்கு அரசு-அரசாங்க அடிப்படையில் காத்திருக்கும் என்று எடுத்துரைத்தார்,” என்று மத்திய அமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்ததை நினைவுகூற வேண்டி இருக்கிறது.

இலங்கை அரசுக்கு மனிதாபிமான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கும், இந்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படத் தமிழகத் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடுமாறு முதல்வர் ஸ்டாலினிடம் ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டார். "தற்போதைய சூழ்நிலையில் உரிய முறையில் விநியோகிக்க நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும்," என்றும் அவர் கூறினார். இந்நிலையில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

GST -யை மாநில அரசு மாற்றி அமைக்கலாம் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மாதம் ரூ. 5,000 போதும் 1 லட்சம் பென்சன் வாங்கலாம்!

English Summary: Tamil Nadu sent rice and medicines to Sri Lanka Published on: 20 May 2022, 04:26 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.