1. செய்திகள்

தமிழகத்தில் இந்தியாவிலேயே முதல் கடற்பாசி பூங்கா!

Poonguzhali R
Poonguzhali R
Tamil Nadu: The First Seaweed Park in India!

மத்திய அரசு மீன்வளத்துறைக்கு எனத் தனி அமைச்சகத்தை உருவாக்கிப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மீனவர்களின் நலனுக்காக இக்கடற்பாசி பூங்கா திட்டமும் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பூங்கா அமைக்க இடம் ஒதுக்கித் தருமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, கடற்பாசி வளர்ப்பிற்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான இடத்தினைத் தமிழ்நாடு அரசு தேர்வு செய்த பின்னர் பூங்கா அமைக்கும் பணி தொடங்கும் என அறிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் மீன் வளத்தை அதிகரிக்க பிரதமரின் மத்திய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ்த் தரமான மீன் உறிபத்தியைக் கடலில் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சுமார் தமிழகத்தில் மீன்வளத் திட்டங்களான குளிர்பதனக் கிடங்கு, மீன் பதப்படுத்தும் ஆலை அமைத்தல், ஆழ்கடல் மீன் வளர்ப்புத் திட்டங்களுக்காக 20,000 கோடி ரூபாய் முதலீடு வழங்கப்பட உள்ளது.

மீன்பிடித் தடைக் காலத்தில் மத்திய அரசின் சார்பில் நிவாரண உதவியாக ரூ.1,500 வழங்கப்படும் என்றும், மீனவர்களுக்குக் குழு காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், நெடுஞ்சாலைகள், அனைவருக்கும் வீடு, ஜல் ஜீவன் மிஷன், மருத்துவக் காப்பீடு, முத்ரா சிறு கடன்கள் போன்ற திட்டங்களில் அதிகப் பயனாளிகளைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்றும் கூறிய அவர், இதனால் தமிழகம் மேலும் வளர்ச்சி நிலையை அடைய வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.

இதன்படிக் கடற்பாசி பூங்கா அமைக்கப்பட்டால், இந்தியாவிலேயே முதல் கடற்பாசி பூங்கா தமிழகத்தில் அமைக்கப்படும். அது அமைவதினால் அரசு பொருளாதார நிறைவை அடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மீனவர்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களும் நிறைவேற்றப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பூங்கா அமைவதன் மூலம் மீனவ மகளிருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. எனவே, அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு சிறந்ததொருவாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க

உணவுத் தொழிலில் இருந்து எஞ்சிய நீர் மூலம் கடற்பாசி சாகுபடி!

கெட்ட கொழுப்பை நீக்கும் 6 வகைப் பருப்புகள்!

English Summary: Tamil Nadu: The First Seaweed Park in India! Published on: 19 April 2022, 12:58 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.