1. மற்றவை

Best Electric Cycles: Nexzu Mobility புதிய ரேஞ்சுகளை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

Sarita Shekar
Sarita Shekar

Best Electric Cycles: Nexzu Mobility ...

மாற்றம் மற்றும் முன்னேற்றம் என்பது வாழ்க்கையின் இன்றியமையாத இரு அம்சங்கள்.  நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் மாற்றத்தைக் காண்கிறோம். அந்த வகையில், நாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் வழியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

போக்குவரத்துத் துறையில் தற்போது வந்துள்ள மிகப்பெரிய மாற்றம் மின்சார வாகனங்கள். இந்தியா மின்சார வாகனங்களை நோக்கி நகர்கிறது. மின்சார வாகனங்களுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறது. எலக்ட்ரிக் கார்கள் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகையால், மிஸ்ரா சைக்கிள்களும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன. பல நிறுவனங்கள் மின்சார சைக்கிள் தயாரிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன.

எலக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles ஸ்டார்ட்-அப் நிறுவனமான நெக்ஸு (Nexzu), புதிய மின்சார சைக்கிள்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது. இந்தத் தொடரில் ஸ்டெப்-அப் சைக்கிள்கள் , கார்கோ வர்ஷன் சைக்கிள்கள், நீண்ட தூரம் செல்லக்கூடிய மாற்றக்கூடிய பேட்டரிக்களை கொண்டுள்ள சைக்கிள்கள் ஆகியவை இருக்கும் என நிறுவனம் மேலும் கூறியுள்ளது. 

தற்போது, நெக்ஸஸ் மொபிலிட்டி ரோம்பஸ், ரோம்பஸ் +, ரோட்லர்க் மற்றும் ரோட்லர்க் கார்கோ போன்ற மின்சார சைகிள்களை விற்பனை செய்கிறது. டெக்ஸ்ட்ரோ மற்றும் டெக்ஸ்ட்ரோ + ஆகியவை நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் வகைகளாகும்.

"நெக்ஸு மொபிலிட்டிக்கு எதிர்காலத்தில் உற்சாகமான தருணங்கள் காத்திருக்கின்றன. பல மாதங்கள் செய்யப்பட்ட விரிவான ஆராய்ச்சிகள் மற்றும் முன்னேற்ற பகுப்பாய்வுகளுக்குப் பிறகு, எங்கள் எதிர்காலத் திட்டங்களை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் புதிய அறிமுகங்களின் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களின் தேவைக்கும் ஒரு தீர்வை முன்வைத்து எங்கள் தயாரிப்புகளுக்கான போர்ட்ஃபோலியோவை பலப்படுத்துவோம். மின்சார வாகனங்களுக்கான துறையில் வரும் காலத்தில் மிக அதிக முன்னேற்றம் இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மின்சார வாகனங்களின் இந்த புரட்சியின் முன்னணியில் இருப்பதற்கு பெருமைப்படுகிறோம். இந்த மின்சார வாகனங்கள் இந்தியர்களால் இந்தியர்களுக்காக உருவாக்கப்படுவதால், இதன் சிறப்பு இன்னும் அதிகமாகிறது" என்று  Nexzu Mobility-யின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஷோனாக் தெரிவித்தார். 

அதன் புதிய மின்சார சைக்கிள்களில் அதிக சுமை சுமக்கும் திறன், அதிக சக்திவாய்ந்த பேட்டரிகள், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பயன்பாட்டு அடிப்படையிலான பயனர் இடைமுகம் (app-based user interface) இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இப்போது, நெக்ஸு மொபிலிட்டி  ​​Nexzu Mobility அதன் பரிணாம வளர்ச்சியை நோக்கி அடுத்த கட்டத்தை எடுக்க உள்ளது. எதிர்காலத்தில், நிறுவனம் புதிய அளவிலான மின்சார மிதிவண்டிகளை அறிமுகப்படுத்தும், இதில் ஸ்டெப்-த்ரூ சைக்கிள்கள், கார்கோ வர்ஷன் சைக்கிள்கள், புதிய நீண்ட தூரம் செல்லக்கூடிய மாற்றக்கூடிய பேட்டரிக்களை கொண்டுள்ள சைக்கிள்கள் ஆகியவை இருக்கும்" என்று நிறுவனம் கூறியது.

மேலும் படிக்க.. 

Ather Energy மின்சார ஸ்கூட்டர் காப்புரிமை கசிந்தது!

WagonR EV : மின்சார வாகன சந்தையில் Maruti-யின் அறிமுகம்: விவரங்கள் இங்கே.

English Summary: Best Electric Cycles: Nexzu Mobility to launch new ranges in the market

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.