1. செய்திகள்

சந்தையில் மாடுகள் விற்பனை குறைவால் நாமக்கல்லில் வியாபாரிகள் அதிர்ச்சி !

Dinesh Kumar
Dinesh Kumar
Cow Traders in Namakkal Market.....

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ளது புதன் சந்தை. இங்கு மாடுகளை வாங்கவும் விற்கவும் வியாபாரிகள் கூடும் இடமாக புதன் சந்தை உள்ளது. இங்கு தமிழகத்தின் தஞ்சாவூர், பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும், கேரளா, பெங்களூரு, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகளை வாங்க வியாபாரிகள் வருவது வழக்கமாகும்.

இங்கு கடந்த சில ஆண்டுகளாக மாடுகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த சந்தைக்கு 3000க்கும் மேற்பட்ட மாடுகள் வரும் நிலையில், தற்போது 1000 மாடுகள் மட்டுமே சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பசுவதைத் தடைச்சட்டம் அறிவிப்பைத் தொடர்ந்து வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாடுகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதன்பிறகு தடை நீங்கியதால் கடந்த சில வாரங்களாக இயல்பு நிலை திரும்பியுள்ளது.

தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் தீவன தட்டுப்பாடு இருந்தும் ஏராளமான கால்நடைகளை வாங்கவோ, விற்கவோ பலர் வருவதில்லை. 

இங்கு சினையுடன் கூடிய பசு மாடுகள்,எருமை மாடுகள் போன்றவை 40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது விலை கூடுதலாக 50 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

கடந்த நாட்களில் கணிசமான விலைக்கு விற்கப்பட்ட காளைகள் தற்போது மாடுகள் இல்லாத நிலையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. பல விவசாயிகள் மாட்டை விற்கலாம் என எண்ணி, மாநில அரசிடம் குறைந்த விலையில் தீவனம் வழங்க வேண்டும் என விவசாயிகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே போன்று வரத்து குறைந்த நிலையில் மாடுகளை கிட்டத்தட்ட 70,000 ரூபாயாக  உயர்ந்துள்ளதாகவும் மாடு வாங்க முடியவில்லை என்றும் விவசாயிகள்  தெரிவித்தனர்.

கடந்த 20 ஆண்டுகளாக வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் கூறுகையில், தற்போது வரத்து குறைந்துள்ளதால், தற்போது சந்தைக்கு வந்துள்ள 1,500 மாடுகளில் ஒரு பகுதியே விலை உயர்ந்துள்ளது, மீதமுள்ள மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு வறுமையில் இறந்து விட்டதாகவும், மற்றும் பழைய கறுப்பு நாட்டு மாடுகள் விற்பனைக்கு இல்லை எனவும் கால்நடை வளர்ப்போர் கூறுகின்றனர். 

மாட்டுச்சந்தை வாரத்தில் ஒரு நாள் நடந்தாலும்,  தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மாட்டுச்சந்தையில் லாபம் இல்லாததால், வியாபாரிகள் விவசாயிகளுக்கு இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க:

பொள்ளாச்சி சந்தையில் ரூ.2 கோடி வரை மாடுகள் விற்பனை!

காங்கேயம் மாடுகளுக்காக தனிச் சந்தை! ரூ.12 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை!

English Summary: Traders in Namakkal are shocked by the decline in cattle sales in the market! Published on: 19 April 2022, 04:10 IST

Like this article?

Hey! I am Dinesh Kumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.