1. செய்திகள்

பவானி அணையில் மாசடையும் நீர்! தமிழக விவசாயிகள் கவலை!

Poonguzhali R
Poonguzhali R
Water pollution in Bhavani Dam! Tamilnadu farmers worry!

ஆற்றில் 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு, அதில் இருந்து காலிங்கராயன் கால்வாயில் பாசனத்துக்கு 600 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 200 கனஅடியும் திறக்கப்படுகிறது.

கீழ்பவானி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடந்த சில நாட்களாக மாசடைந்து உள்ளதாக பவானி அணையின் நீரை பயன்படுத்தும் மக்கள் குற்றம்சாட்டினர். தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு கூறுகையில், ''காளிங்கராயன் கால்வாயில் எல்.பி.டி., மூலம் வழங்கப்பட்டு வரும் தண்ணீர், கடந்த 3 நாட்களாக கருப்பு மற்றும் அடர் நீல நிறத்தில் காணப்படுகிறது.

பாசனத்திற்கு எல்பிடியை நம்பியிருக்கிறோம். ரசாயன நீரை பயன்படுத்தினால் பயிர்கள் சேதமடையும் என்பதால் ஆற்றில் இருந்து வரும் நீர் மாசுபடுவது கவலை அளிக்கிறது. தண்ணீர் குடிப்பதற்கு தகுதியற்றதாக மாறி வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் கோவையில் உள்ள ஆற்றுப்படுகைகள் மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள சாய, சலவை தொழிற்சாலைகள் ஆகும். பல தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ளன. இந்த ஆலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் ஆற்றில் விடுவதே இதற்கு முக்கிய காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

ஈரோட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சிவகிருஷ்ணன் கூறுகையில், ''இதை தடுக்க, மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில், ஆறு முழுவதும் மாசு அடைந்து நொய்யல் ஆறு போல் மாறிவிடும்,'' என்றார். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, எல்பிடியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மாசுபடுவதாக தெரிவித்தனர்.

“இது எங்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியில் தற்போது 86 அடி தண்ணீர் உள்ளது. ஆற்றில் 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு, அதில் இருந்து காலிங்கராயன் கால்வாயில் பாசனத்துக்கு 600 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 200 கனஅடியும் திறக்கப்படுகிறது. சனிக்கிழமையும் தண்ணீரின் நிறம் வித்தியாசமாக இருந்தது,” என்று ஈரோட்டைச் சேர்ந்த WRD அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த அணைக்கு நீலகிரியில் இருந்து இரண்டு வழிகளில் தண்ணீர் வருகிறது. மோயார் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் சுத்தமாக இருந்தாலும், மேட்டுப்பாளையம் வழியாக அணைக்கு வரும் தண்ணீர், ஆற்றின் கரையோரம் உள்ள தொழிற்சாலைகளால் மாசுபடுகிறது. இந்த ரசாயனக் கழிவுகள் எப்போது ஆற்றில் விடப்பட்டன என்பது எங்களுக்குத் தெரியாது.

தற்போது அணையில் தண்ணீர் குறைந்து ரசாயன கழிவுகள் வெளியேறி வருகிறது. இந்த அணையின் நீரை நம்பி சுமார் 3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 மில்லியன் மக்களும் குடிநீருக்காக இதை நம்பியுள்ளனர். இதே நிலை நீடித்தால், பவானி ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் விவசாயம் மற்றும் குடிநீருக்கு லாயக்கற்றதாக மாறும்,'' என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க

விவசாயிகள் நலத்திட்ட உதவிகள் பெற இணையதளத்தில் இன்றே பதிவு செய்யுங்க!

கூடுதல் வேலை நேரத்திற்கு நிவாரணம்! பணியாளர்களுக்கு ஜாக்பாட்!!

English Summary: Water pollution in Bhavani Dam! Tamilnadu farmers worry! Published on: 17 April 2023, 01:46 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.