1. செய்திகள்

உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா - ஓர் பார்வை!

Poonguzhali R
Poonguzhali R

இது 2004-ஆண்டு தொடங்கப்பெற்று இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில்  ஒவ்வொரு ஆண்டின் தேசிய நெல் திருவிழா நடைப்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இவ்வாண்டிற்கான தேசிய நெல் திருவிழாவானது,  இம்மாதம் 21,22 ஆகிய இரு தேதிகளான நேற்றும் இன்றும்  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

2022-ஆம் ஆண்டு திருவிழாவின் சிறப்பம்சங்கள்:

  • பதினைந்தாயிரம் விவசாயிகளுக்கு தலா இரண்டு கிலோ பாரம்பரிய விதைநெல் இலவசமாக வழங்கப்பட்டது.

  • விழாவில் பங்குபெறும் அனைவருக்கும் பாரம்பரிய நெல் வகைகளில்  செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

  • பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுக் கொண்டிருப்போருக்கும், இயற்கையைப் பாதுகாக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் நெல் ஜெயராமன், நம்மாழ்வார் விருதுகள் வழங்கப்பட்டன.

  • இயற்கை சார்ந்த வேளாண்மை உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் சார்ந்த கண்காட்சி நடைபெற்றன.  

  • கண்காட்சியில், 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், பாரம்பரிய நாட்டுக் காய்கறிகள், விதைகள், மரக்கன்றுகள் முதலானவை இடம்பெற்றன.

மேலும் படிக்க..

டெல்டா விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

விவசாயத்திற்கு 5 லட்சம் கடன் பெறலாம்! விவரம் உள்ளே!

  • பாரம்பரியப் பண்பாடு சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

  • தமிழக வேளாண்துறை சார்பாக மண் பரிசோனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.  

  • தஞ்சை தொழில்நுட்பக் கழகம் சார்பாக மதிப்புக் கூடுதல் சார்ந்த தொழில்நுட்ப வாகனம் மூலம் உழவர்களுக்கு இலவசப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

  • தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களான புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், பஞ்சாப், ஆந்திரா, தில்லி முதலான மாநிலங்களிலிருந்தும் கல்லூரி மாணவர்கள் மற்றும் நுகர்வோர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் பங்கேற்று உள்ளனர்.

  • பெண்களுக்கான பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டி நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.  இப்போட்டியில் சுமார் 500 பெண்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அதிக அளவிலான பெண்கள் கலந்துகொண்டு உள்ளனர்.

  • தஞ்சை இந்திய உணவுப் பதனத் தொழில்நுட்பக் கழகம் சார்பாக, தொழில் நுட்ப வாகனங்கள் மூலம் பங்கேற்கும் விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகின்றன.  

மேலும் படிக்க..

மாதம் ரூ. 5,000 போதும் 1 லட்சம் பென்சன் வாங்கலாம்!

டிராக்டர் லோன் எங்கு பெறுவது? எப்படி பெறுவது?

  • தமிழகம் மற்றும் பிற மாநில இயற்கை வேளாண்  குழு வல்லுநர்களைக் கொண்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்புக் கருத்துரை அமர்வுகளும் நடந்தப்படுகின்றன.

இவ்வகையான சிறப்பம்சங்கள் இந்த ஆண்டின் தேசியத் திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.  இது நம்மாழ்வாரின் சீடரான மறைந்த நெல். ஜெயராமன் அவர்களால் தொடங்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க..

உழவுக்கு வந்தனம் செய்வோம் - "தேசிய விவசாயிகள் தினம்"!!

English Summary: World Famous National Paddy Festival - An Overview! Published on: 06 April 2022, 05:53 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.