1. மற்றவை

PF வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: EPFO முக்கிய அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
PF Money

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) தனது பயனாளிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, EPFO பயனாளிகள் தங்களது தனிப்பட்ட சொந்த விவரங்களை சமூக வலைதளங்களிலும், மொபைலிலும் யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என EPFO அறிவுறுத்தியுள்ளது.

PF கணக்குதாரர்கள் (PF Account Holders)

அண்மைக்காலமாக PF கணக்குதாரர்கள் உள்பட EPFO பயனாளிகளை சில மோசடி கும்பல்கள் குறிவைத்து கொள்ளை அடித்து வருகின்றனர். இந்த கும்பல்கள் முதலில் EPFO பயனாளிகளின் ஆதார் எண், பான் எண், UAN எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கின்றனர். விவரமறியாத EPFO பயனாளிகளோ எந்த ஆபத்தும் இல்லை என எண்ணி சொந்த விவரங்களை பகிர்ந்துவிடுகின்றனர். மிக முக்கியமாக, யாரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்படும் OTPஐ மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்கின்றனர்.

மோசடி கும்பல்கள்

இதை பயன்படுத்தி பல EPFO பயனாளிகளிடம் மோசடி கும்பல்கள் கொள்ளை அடித்து வருகின்றனர். எனவே, EPFO பயனாளிகள் தங்கள் ஆதார் எண், பான் எண், UAN எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட சொந்த விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என EPFO நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

சொந்த விவரங்கள் (Personal Details)

இதுகுறித்து EPFO வெளியிட்டுள்ள செய்தியில், EPFO நிறுவனம் யாரிடமும் ஆதார் எண், பான் எண், UAN எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட சொந்த விவரங்களை கேட்காது. எனவே, விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க

ஆதார் கார்டு குறித்து முக்கிய அறிவிப்பு: UIDAI எச்சரிக்கை!

உங்கள் PF பென்சன் பற்றி தெரிந்து கொள்ள இதை ஃபாலோ பண்ணுங்க!

English Summary: Attention PF Customers: EPFO ​​Important Notice! Published on: 21 August 2022, 01:46 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.