1. மற்றவை

தமிழகத்தில் அரசு வேலை பெறுவதில் லஞ்சம்! மிகப்பெரிய தடை?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Bribery in getting government jobs in Tamil Nadu

அரசு அலுவலகங்களில், குறிப்பாக இ-சேவை மையங்கள் மற்றும் வருவாய் மற்றும் பதிவுத் துறையில் ஊழல் மலிந்து கிடப்பதை கணக்கெடுப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

அரசு சேவைகளில் ஊழலை தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது,  ஆனாலும் என்ஜிஓ கணக்கெடுப்பு ஒன்று நிதர்சன நிலவரத்தை சுட்டி காட்டியுள்ளது. மாதிரி சேவை உரிமை மசோதாவையும் ஊழல் எதிர்ப்பு என்ஜிஓ அறப்போர் இயக்கம் வெளியிட்டது.

இந்த NGO நடத்திய மதிப்பாய்வில், தமிழகத்தில் அரசு சேவைகளைப் பெறுவதில் லஞ்சம், தாமதம் மற்றும் செயல்பாட்டில் இணக்கம் இல்லாதது மிகப்பெரிய தடையாக இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அரசு அலுவலகங்களில், குறிப்பாக இ-சேவை மையங்கள் மற்றும் வருவாய் மற்றும் பதிவுத் துறையில் ஊழல் மலிந்து கிடப்பதை இந்த கணக்கெடுப்பு அம்பலமாகியுள்ளது.

வழங்கப்பட்ட தரவுகளின்படி, தமிழ்நாட்டில் வருவாய் மற்றும் பதிவுத் துறையில் அதிக ஊழல் இருப்பதாக என்ஜிஓ கணக்கெடுப்பு தகவல்களை வழங்கியுள்ளது. மேலும் அறப்போர் இயக்கம் சேவை பெறும் உரிமை சட்டம் மாதிரி மசோதாவையும் வெளியிட்டது.

கேள்விகளுக்கு பதிலளித்தவர்களில் 93 சதவீதம் லஞ்சம் கொடுக்கும்படி கெட்டவர்கள், 82% பேர் சேவையை அணுகும் அனுபவத்தில் அதிருப்தி அடைந்தனர். பதிலளித்தவர்களில் 84% சேவை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான முறையீடுகளை சுயாதீன ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று விரும்பியவர்கள். தமிழ்நாடு சேவை உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்களின் பட்டியலைத் தயாரிக்க உதவும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது, ஆட்சிக்கு வருபவர்கள், சேவை உரிமை சட்டத்தை (Right to Service Act) நிறைவேற்ற வேண்டும் என்ற வாக்குறுதியை இந்த அறப்போர் இயக்கம் தெரிவித்தது. இந்தக் கோரிக்கையை போட்டியிட்ட அனைத்து கட்சிகளிடமும் இந்த இயக்கம் கோரியது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வெற்றிபெற்ற திமுக இந்த அறிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது. தமிழக ஆளுநரின் தொடக்க உரையில், இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பற்றியும் கூறியது. 

அரசு சேவைகளில் ஊழலை தடுக்க வேண்டும் என்பதற்கான  மசோதாவை இந்த என்ஜிஓ தன்னார்வலர்கள் தற்போது தொகுத்து வெளியிட்டனர்.  கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருக்கும் சட்டங்களின் சிறப்பம்சங்களை கருத்தில் கொண்டு இந்த மாதிரி மசோதா தயார் செய்துள்ளது.

மேலும் படிக்க:

கல்லூரி மாணவர்களுக்கு ஒரே மாதத்தில் 2 கொரோனா தடுப்பூசி?

சிலிண்டர் விலை உயர்வு! 1000 ரூபாயில் விற்பனை?

English Summary: Bribery in getting government jobs in Tamil Nadu! The biggest hurdle? Published on: 01 September 2021, 06:42 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.