1. மற்றவை

ஆதார் கார்டு கையில் இல்லையா? இனிமே இது போதும்!

R. Balakrishnan
R. Balakrishnan
Aadhar card

ஆதார் கார்டு என்பது 12 இலக்க எண் கொண்ட ஒரு அடையாள அட்டையாகும். இந்தியர்கள் அனைவருக்கும் இது அவசியம். ஒவ்வொருவருக்கும் தனியாக இரு ஆதார் கார்டு இருக்கும். ஆதார் கார்டு இல்லாமல் இந்தியாவில் எதுவும் கிடைக்காது என்ற நிலைமை வந்துவிட்டது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல், சிம் கார்டு, வங்கிக் கணக்கு, பான் கார்டு போன்ற பல்வேறு விஷயங்களில் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை (Aadhar card)

ஆதார் கார்டை அனைவருமே கையில் வைத்திருப்பார்கள். ஆனால் சில நேரங்களில் ஆதார் கார்டை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டுச் சென்றுவிடுவோம். சிலர் அதை தொலைக்கவும் செய்திருப்பார்கள். அப்போது ஆதார் தேவைப்பட்டால் கவலை வேண்டாம். அதற்காகவே இ-ஆதார் என்ற வசதி இருக்கிறது. இ-ஆதார் என்பது டிஜிட்டல் ஆதார் கார்டு. கையில் வைத்திருக்கும் ஆதார் அட்டையைப் போல டிஜிட்டலில் ஆதார் கார்டை நாம் ஸ்மார்ட்போன்களில் வைத்துக் கொள்ளலாம். ஆதார் அமைப்பின் UIDAI வெப்சைட்டில் சென்று இந்த இ-ஆதாரைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

டவுன்லோடு செய்வது எப்படி?

  • ஆதார் சேவைகளுக்கான அதிகாரப்பூர்வ uidai.gov.in என்ற முகவரியில் சென்று ’Get Aadhaar’ என்ற சேவையில், ’download Aadhaar’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் நீங்கள் UID, EID அல்லது VID ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அடுத்து, ’Send OTP’ என்பதை கிளிக் செய்தால் உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும்.
  • அதைப் பதிவிட்டு ’verify and download’ என்பதை கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • உடனடியாக உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டு PDF வடிவத்தில் உங்களது கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகிவிடும்.

இந்த PDF காப்பியை ஓப்பன் செய்வதற்கு நான்கு இலக்கு பாஸ்வேர்டு கேட்கப்படும். அதில் உங்களது பெயரின் முதல் நான்கு எழுத்துகளை கேப்பிட்டல் லெட்டரிலும், அதைத் தொடர்ந்து உங்களது பிறந்த தேதிக்கான வருடத்தையும் பதிவிட வேண்டும்.

மேலும் படிக்க

பென்சனர்களுக்கு புதிய வசதி: இனி எல்லாமோ ரொம்ப ஈசி தான்!

PM Kisan: பயனாளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா? எப்படி சரிபார்ப்பது?

English Summary: Don't have Aadhaar card? This is enough! Published on: 11 October 2022, 08:02 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.