1. மற்றவை

ஏன் ஆதார் அட்டையைக் குடும்ப அட்டையுடன் இணைக்க வேண்டும்? தெரிந்துகொள்ளுங்கள்.!

Poonguzhali R
Poonguzhali R
Family Cardholders: Why link the Aadhaar card with the family card?

ரேஷன் கார்டுகளை அடிப்படையாகக் கொண்டு மோசடிகள் நடைபெறாமல் இருப்பதறகான ரேஷன் கார்டு குறித்த பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்துக் கொண்டு இருக்கின்றது. அந்த வகையில் இந்த விதிமுறையையும் செய்ய வேண்டி மக்களிடம் அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, பான் கார்டு, மொபைல் நம்பர், வங்கிக் கணக்கு என பல்வேறு சான்றுகளுடன் ஆதாரை இணைக்க அரசு வலியுறுத்தி வருகின்றது. அந்த நிலையில் இப்பொழுது குடும்ப அட்டையுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது, அரசு. இவ்வாறு ஆதார் எண்ணை இணைக்கக் கடைசி தேதியினை அரசு நீட்டித்துள்ளது. அதாவது ஜூன் 30, 2022 வரை தங்கள் ரேஷன் கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியும். இந்த ஆதார் எண் இணைப்பு செய்கை இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அனைவரும் தங்களது குடும்ப அட்டையுடன் அவரவர் ஆதார் எண்ணை இணைத்து விட அரசால் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

ஆன்லைனில் எவ்வாறு இணைப்பது?

  • குடும்ப அட்டை அல்லது ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கு முதலில் ஆன்லைனில் uidai.gov.in என்ற இணைய தளப் பக்கத்தைத் திறக்க வேண்டும்.
  • அதன் பிறகு, start now என்ற இடத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, வீட்டு முகவரி, மாவட்டம், எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
  • பின்னர், அங்கு தெரியும் ration card benefit என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவறைப் பூர்த்திச் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது உங்கள் தொலைபேசிக்கு ஓடிபி வரும்.
  • அந்த ஓடிபி-யைக் கொடுத்துப் பதிவு செயல்முறையை முடிக்க வேண்டும்.

ஆஃப்லைனில் எவ்வாறு இணைப்பது?

  • ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க ரேஷன் கார்டு மையத்தை அணுகலாம்.
  • அதாவது, ரேஷன் கார்டு நகல், ரேஷன் அட்டைதாரரின் புகைப்படம், ஆதார் நகல் ஆகியவற்றை ரேஷன் கார்டு மையத்தில் சமர்பிக்க வேண்டும்.
  • அதன்பிறகு உங்களின் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைத்துத் தரப்படும்.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்தல் என்பது ரேஷன் கார்டைக் கொண்டு எந்த வித மோசடிகளும் நடைபெறாமல் இருக்க உதவியாக இருக்கும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. எனவே, தாங்கள் ஒவ்வொருவரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் உங்களின் ரேஷன் கார்டு-டன் ஆதார் எண்ணை இணைத்திடுங்கள்.

மேலும் படிக்க

அரசு போக்குவரத்து பணிக்கும் தேர்வு அறிவிப்பு! என்ன தேர்வு? எப்போது தேர்வு?

3 லட்சம் மானியத்தில் சோலார் மின் இணைப்பு பெறுவது எப்படி?

English Summary: Family Cardholders: Why link the Aadhaar card with the family card? Published on: 29 May 2022, 01:23 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.