1. மற்றவை

உச்சம் தொட்ட சின்ன வெங்காய விலை! விவசாயிகள் மகிழ்ச்சி!!

Poonguzhali R
Poonguzhali R
Peak price of small onions!

வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து சென்ற மாதம் வரை 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனையான சின்னவெங்காயம் விலை இப்போது உயர்வு அடைந்து 25 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

திண்டுக்கலில் வெங்காயத்திற்கு எனத் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் தனியான சந்தையே நடைபெற்று வருகின்றது. திண்டுக்கல் மாவட்டத்தினைச் சுற்றியுள்ள வேடசந்தூர், தாராபுரம், திருப்பூர், தேனி, ஒட்டன்சத்திரம், கம்பம் முதலான பல ஊர்களில் இருந்து விவசாயிகள் விளைவித்த வெங்காயத்தை இந்த சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வருவார்கள். இந்த சந்தைக்குக் கொண்டு வரக்கூடிய வெங்காயங்களைத் தமிழகம் மட்டுமன்றிக் கேரளா வெளிமாநில மாவட்ட வியாபாரிகள் விற்பனைக்கு வாங்கிச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:  TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!

சில மாதங்களாகத் தமிழகத்தில் வெங்காய வரத்து அதிகமாகக் காணப்படுவதால் வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. 15 தினங்கள் முன்பு வரை தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களான மைசூர், ஆந்திரா போன்ற பல இடங்களிலிருந்தும் கிட்டத்தட்ட 500 டன் அளவில் வரத்து இருந்ததால் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனையாகியது.

மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்!!

இந்நிலையில் 4 மாத காலமாக ஏற்றுமதியை நிறுத்தி வைத்திருந்தது, அரசு. ஆனால், தற்போது வெளி நாடுகளான மலேசியா, இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் 15 தினங்கள் முன்பு வரை 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம் இப்போது 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆகி வருகிறது.

மேலும் படிக்க: தமிழக அரசு: நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கத் தேவையில்லை!

இத்தகைய விலை உயர்வால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர். ஏற்றுமதி அனுமதியைத் தொடர்ந்து இவ்வாறே நீட்டித்தால் மேலும் சின்ன வெங்காயத்தின் விலை ஏற்றம் அடைய வாய்ப்புகள் இருக்கிறது என விவசாயிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.

மேலும் படிக்க

மேட் இன் தமிழ்நாடு: உலகம் எங்கிலும் செல்ல நடவடிக்கை!

இனி முகக் கவசம் கட்டாயம்: சென்னை மாநகராட்சி

English Summary: Peak price of small onions! Farmers are happy!! Published on: 06 July 2022, 05:27 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.