1. மற்றவை

பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிரடி சலுகை! என்ன தெரியுமா?

Poonguzhali R
Poonguzhali R
Punjab National Bank Announced big Offer!

இந்திய நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடிப் பல்வேறு வகையில் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகை சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு பலவிதத்தில் பயனளிக்கின்றன. அத்தகையவற்றுள் ஒன்றாக இன்று அறிவிக்கப்பட்ட பிஎன்பி க்ரெடிட் கார்டு சலுகை குறித்து இப்பதிவு விளக்குகிறது.

மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!

நீங்கள் பிஎன்பியின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் பயன்படும். அதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் கட்டண நிறுவனமான பேடிஎம் உடன் தற்போது இணைந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பேடிஎம் வாலட்டில் பணத்தைச் சேர்க்கலாம். இவ்வாறு சேர்ப்பதன் மூலம் கேஷ்பேக்கின் பலனைப் பெறலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!

இந்நிலையில் பேடிஎம் மூலம் டிஜிட்டல் பணம் செலுத்தினால், இத்தகைய சிறந்த சலுகையைப் பயன்படுத்திப் பயனடைந்து கொள்ளலாம். ஆகவே, பேடிஎம் வாலட்டில் பணத்தை எவ்வாறு சேர்ப்பது என்று தெரிந்துக்கொள்ள முனையலாம்.

மேலும் படிக்க: 10, +12 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறத் தேதி அறிவிப்பு!

பிஎன்பி மற்றும் பேடிஎம் இணைந்து ஒரு சிறந்த ஆஃபரைக் கொண்டு வந்துள்ளதாக ட்வீட் செய்து இந்த ஆஃபர் பற்றிய தகவலைப் பிஎன்பி தெரிவித்திருக்கிறது. அதன்படி, பிஎன்பி கிரெடிட் கார்டு மூலம், நீங்கள் 2 சதவீதம் வரை கேஷ்பேக்கின் பலனைப் பெறலாம். இந்த கேஷ்பேக்கின் பலன் பேடிஎம் வாலட்டில் ரூ.150 முதல் ரூ.3,000 வரை பணம் சேர்த்தால் கேஷ்பேக் மேலும் வசதியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த சலுகை 30 ஜூன் 2022 வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விரைந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: பொறியியல் கலந்தாய்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் உள்ளே!

வழி முறைகள்

  • முதலில் பேடிஎம் இன் செயலியைத் திறக்க வேண்டும்.
  • அதன் பிறகு பேடிஎம் வாலட் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக ஆட் மனி ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு, சேர்க்க விரும்பும் தொகையைச் சேர்க்கலாம்.
  • பின்னர் தொடரவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாகப் பிஎன்பி கிரெடிட் கார்டில் இருந்து பணத்தைச் சேர்க்கலாம்.
  • இப்போது நீங்கள் கேஷ்பேக்கின் பலனைப் பெறலாம்.

மேலும் படிக்க: SI தேர்வு எழுதுவோருக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு?

எனவே, விருப்பமும் வாய்ப்பும் உள்ள பிஎன்பி வாடிக்கையாளர்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திப் பயன்பெறுங்கள்.

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் குவியும் அட்மீசன்கள்! ஏன் தெரியுமா?

ICICI வங்கியின் வட்டி உயர்வு! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!!

English Summary: Punjab National Bank Announced big Offer! Do you know what it is? Published on: 24 June 2022, 10:42 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.