1. மற்றவை

இளைஞர்களுக்கு மாதம் ரு.3400 கொடுக்கும் மத்திய அரசு?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு மாதம் 3400 ரூபாய் உதவி வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிவருகிறது.

மத்திய அரசு சார்பாகப் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பிஎம் கிசான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில்,  பிரதமரின் கியான்வீர் யோஜனா என்ற திட்டம் குறித்த செய்தி ஒன்று சமீபத்தில் வைரலானது.

ரூ.3400

மத்திய மோடி அரசு சார்பாகச் செயல்படுத்தப்படும் இந்த பிரதமரின் கியான்வீர் யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு மாதம் 3400 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என்று நிறையப் பேர் நினைத்திருப்பார்கள்.

திட்டமே இல்லை

ஆனால் இதைத்தொடர்ந்துநடத்தப்பட்ட ஆய்வில் இப்படியொரு திட்டமே இல்லை என்று தெரியவந்துள்ளது.PIB fact check சார்பாக நடத்தப்பட்ட உண்மைச் சரிபார்ப்பு சோதனையில் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3400 நிதியுதவி தரக்கூடிய வகையில் ஒரு திட்டமே இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நம்ப வேண்டாம்

பொதுமக்களை ஏமாற்றும் வகையில் இதுபோன்ற போலியான செய்திகள் சமீப நாட்களில் சமூக வலைதளங்களில் அதிகமான அளவில் பரப்பப்பட்டு வருவதாகவும், இந்த விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

போலி செய்தி

இதுபோன்ற நிறைய போலியான செய்திகளின் உண்மைத் தன்மையை PIB கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. எனவே சமூக ஊடகங்களில் பரவும் அனைத்து விஷயங்களும் உண்மை என்று நம்ப வேண்டாம். அதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்வது அவசியமாகிறது.

மேலும் படிக்க...

செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!

ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!

English Summary: The central government will give Rs. 3400 per month to the youth? Published on: 19 September 2022, 11:22 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.