1. வாழ்வும் நலமும்

கர்ப்பக் காலத்தில் சுடு தண்ணீரைக் குடிக்கலாமா?

Poonguzhali R
Poonguzhali R
Can I drink hot water during pregnancy?

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியமாகும். ஏனெனில் இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உடலின் செயல்திறனை மேம்படுத்துகிறது. அதனால், கர்ப்ப காலத்தில் அதிக தண்ணீர் தேவையாக இருக்கிறது. போதுமான தண்ணீர் குடிப்பது கர்ப்ப காலத்தில் தலைவலியைக் குறைக்க உதவும். எனவே, தாய்மார்கள் ஒரு நாளைக்கு 8-12 கிளாஸ் தண்ணீர் அல்லது 2.3 லிட்டர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

சாதாரண தண்ணீரைக் குடிப்பதை விட வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது அதிக நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது. வெதுவெதுப்பான நீர் சோர்வைக் குறைக்கிறது. தொற்றுநோய்களுக்கான எதிர்ப்பை மேம்படுத்துகிறது. ஆனால் மிகவும் சூடான நீரைத் தவிர்க்கவும். ஏனெனில் இது உங்கள் வாயில் உள்ள புறணி மற்றும் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கும்.

கர்ப்ப காலத்தில் நீங்கள் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?

கருவின் சுழற்சி, அம்னோடிக் திரவம் உருவாக்கம், கூடுதல் இரத்த உற்பத்தி ஆகியவற்றை ஆதரிக்க ஒரு சராசரி நபரை விட கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. புதிய திசுக்களை உருவாக்கவும், ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்லவும், செரிமானத்தை அதிகரிக்கவும், கழிவுகள் மற்றும் நச்சுகளை வெளியேற்றவும் தண்ணீர் அவசியமாகும்.

கர்ப்பக் காலத்தில் ஹார்மோன் சமநிலையின்மை, சோர்வு, சோம்பல் மற்றும் நீரிழப்பு ஆகியவற்றை ஏற்படும். இதையொட்டி, தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல், இரத்த அழுத்த ஏற்ற இறக்கங்கள், மலச்சிக்கல் மற்றும் பிடிப்புகள் ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் நீரிழப்பு, நரம்பு குழாய் குறைபாடுகள், குறைந்த அம்னோடிக் திரவம், போதுமான தாய்ப்பால் உற்பத்தி, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் உள்ளிட்டவை ஏற்படலாம். இவற்றிலிந்து உங்களை காக்க அதிக தண்ணீரைக் குடிக்க வேண்டும். எனவே கர்ப்ப காலத்தில் நீர்ச்சத்துடன் இருப்பது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் போதுமான அளவு நீரேற்றமாக இருப்பது மேற்கண்ட சிக்கல்களைத் தடுக்க உதவும். அத்துடன் உங்கள் ஆற்றலை அதிகரிக்கவும், உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், உங்கள் சருமத்தை மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

வெதுவெதுப்பான தண்ணீரை ஏன் குடிக்க வேண்டும்?

  • வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது, உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் செரிமானத்திற்கு உதவும்.
  • செரிமான மண்டலத்தைச் சுத்தப்படுத்தவும், உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்சுவதற்கு அனுமதிக்கிறது
  • கொழுப்பு மற்றும் எண்ணெய் துளிகளை கரைக்க உதவும்.
  • நோய் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும்
  • மலச்சிக்கலை எதிர்த்துப் போராடி, சீரான குடல் அசைவுகளுக்கு உதவும்.
  • குளிர்கால மாதங்களில் தொண்டையில் நோய்த்தொற்று, இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற சிக்கல்களைத் தீர்க்கும்.

வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நன்மை பயக்கும் என்றாலும், அதில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளைக் கொல்லும் அளவுக்கு நீரை கொதிக்க வைக்க வேண்டும். மேலும், எப்போதும் வடிகட்டப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். அடிக்கடி இடைவெளிகளுடன் தண்ணீரைக் குடிக்க வேண்டும். நீங்கள் மிக வேகமாகத் தண்ணீர் குடித்தால், அது உங்கள் சிறுநீரகத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். நீங்கள் விழித்திருக்கும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ஒரு கப் தண்ணீர் குடிக்க வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். வெற்றுத் தண்ணீரைக் குடிப்பதில் விருப்பமில்லை என்றால், சுவையை அதிகரிக்க உங்கள் தண்ணீரில் இரண்டு எலுமிச்சைத் துண்டுகள் அல்லது சில தர்பூசணித் துண்டுகளைச் சேர்த்து பருகலாம்.

மேலும் படிக்க

கர்ப்ப காலத்தில் இதைச் சப்பிட்டுவிடாதீர்கள்! அதிர்ச்சி தகவல்!!

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் பெறுவது எப்படி?

English Summary: Can I drink hot water during pregnancy? Published on: 18 May 2022, 04:37 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.