1. Blogs

உலகின் மிகப்பெரிய வாழைப்பழத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan
musa ingens banana variety

உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான வாழை மரம், நியூ கினியாவின் மலைகளில் காணப்படுகிறது. இந்த மர்மமான மகத்தான வாழைப்பழம் ஒரு போட்டியற்ற பட்டத்தை கொண்டுள்ளது.

மியூஸா இன்ஜென்ஸ் (Musa ingens), உலகின் மிகப்பெரிய வாழை மரத்தின் அறிவியல் பெயராகும். கடல் மட்டத்திலிருந்து 100 மற்றும் 200 மீட்டர்களுக்கு இடையில் அமைந்துள்ளன மேற்கு பப்புவாவில் உள்ள அஃப்ராக் மலைகளுக்கு இடையே, இந்த வாழைமரம் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பப்புவா தொல்லியல் மையத்தைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் கருத்துப்படி, மூசா இன்ஜென்ஸ் கற்காலத்தில் இருந்தே உள்ளது.

குடும்பம்: மியூசேஸி (Musaceae)
அறிவியல் பெயர்: மியூஸா இன்ஜென்ஸ் (Musa ingens)
பொதுவான பெயர்: ஜெயண்ட் ஹைலேண்ட் வாழை (Giant Highland Banana)
பிறப்பிடம்: நியூ கினியா

ஜெயண்ட் ஹைலேண்ட் வாழை உலகின் மிகப்பெரிய மூலிகை தாவரம் மற்றும் வாழையின் மிகப்பெரிய இனமாகும். இது மிகவும் அரிதான இனமாகும், இது நியூ கினியா தீவில் 1200 முதல் 1800 மீட்டர் உயரத்தில் மலை காடுகளில் மட்டுமே காணப்படுகிறது. 15 மீட்டர் உயரமும், 2 மீட்டர் சுற்றளவும் கொண்டதாக வளரும். இந்த மரத்தில் உள்ள வாழை இலை 5 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் கொண்டது. பூ பூத்த பிறகு, வாழை தார்கள் வளரும், சில நேரங்களில் 300 வாழைப்பழங்களை வைத்திருக்கும், ஒவ்வொன்றும் 25-30 செ.மீ நீளம் கொண்டவை ஆகும். ஒரு வாழைப்பழ தார் 60 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும்.

இது உலகின் மிகப்பெரிய வாழைமரமாகவும், உயரமான வாழைப்பழங்களை கொண்டனவாகவும் மற்றும் உலகின் மிகப்பெரிய மரம் அல்லாத தாவரமாகவும் சாதனை படைத்துள்ளது, குறைந்தபட்சம் 15 மீ உயரத்தை எட்டக்கூடிய ஒரு தண்டு, அடிவாரத்தில் தோராயமாக ஒரு மீட்டர் விட்டம் மற்றும் ஒரு தாவரத்தின் மொத்த உயரம் குறைந்தது 20 மீ ஆக இருக்கிறது.

இது இயற்கையின் ஆச்சரியங்களில் ஒன்று, ஒரு மூலிகைத் தாவரமானது, ஒரு நிலத்தடி வேர்த்தண்டுக்கிழங்கை உருவாக்குவதன் மூலம் பல மர மரங்களை விட பெரிய அளவில் எவ்வாறு வளரக்கூடும் என்பது வியப்பே.

இந்த பெரிய வாழை இலையை மலைவாழ் மக்கள் தங்கள் குடிசைகளின் மேற்கூரையாகவும் பயன்படுத்துகிறார்கள். இந்த மரத்தின் வாழைப்பழம் 18 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. இந்த மரத்தை வீட்டில் வளர்க்க முடியும் என முயற்சி செய்து பார்த்துள்ளனர். ஆனால் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

இதற்குக் காரணம் வெப்பமண்டலத்தில் தாழ்வான நிலத்தில் வளர்க்க முடியாது. மேட்டுப்பகுதியில் அதுவும் பகலில் குளிர்ச்சியான, இரவில் ஈரமான மற்றும் சூடான மிதமான காலநிலையிலேயே இந்த வாழை மரத்தை வளர்க்க முடியும். இதனால் தான் இந்த மரம் பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

மேலும் படிக்க

காபி மற்றும் தேநீர் அடிமையா? குறைக்க இந்த விஷயங்களை செய்யுங்கள்

அதிக சம்பள வேலைக்கு குட்பை.. தினை விவசாயத்தில் அபார வெற்றி பெற்று தினை மனிதரானார் சாமானியர்!

English Summary: Giant banana Musa ingens: All you need to know about the world's largest banana Published on: 02 February 2023, 05:58 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.