1. விவசாய தகவல்கள்

விவசாயிக்கு ஒரு ரூபாய்- நடிகர் விஷால் கொடுத்த வாக்குறுதி

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
actor Vishal's promises to One rupee to the farmer

தனது படம் வெற்றியடைந்த நிலையில் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் விவசாயிக்கு வழங்கப்படுமென நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இதனைப்போல் டெல்லியில் இன்று PM விஸ்வகர்மா திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். காவிரி பிரச்சினை தொடர்பாக விவசாயிகள் ரயில் மறியல் போரட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேற்குறிப்பிட்ட செய்திகள் தொடர்பான விரிவான தகவல்கள் பின்வருமாறு-

ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் விவசாயிக்கு- நடிகர் விஷால்:

சில தினங்களுக்கு முன்பு நடிகர் எஸ்.ஜே.சூர்யா, விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் நடிகர் விஷால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காணொலி ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

அதில் நான் ஏற்கெனவே கூறியது போல், படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PM Vishwakarma Scheme- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்:

கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் தங்களது பாரம்பரிய தொழிற் பயிற்சியை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு PM விஸ்வகர்மா திட்டத்தினை பிரதமர் மோடி இன்று டெல்லியில் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தில் முதற்கட்டமாக பட்டியலிடப்பட்டுள்ள 18 பாரம்பரிய தொழில்களின் கீழ், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளது.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் புதிய திட்டமான "பிரதமரின் விஸ்வகர்மா" PM Vishwakarma திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டமானது குலத் தொழில் முறையை மீண்டும் சமூகத்தில் உருவாக்கும் வகையில் உள்ளதாக பலத்த எதிர்ப்பும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காவிரி பிரச்சினை- ரயில் மறியல் போரட்டத்திற்கு விவசாயிகள் ஆயத்தம்

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில், காவிரி நீரை பெற்றுக் கொடுக்க மறுத்துவரும் ஒன்றிய அரசை கண்டித்தும், உடன் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தண்ணீரை பெற்றுத் தர  வலியுறுத்தியும் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைப்பெற உள்ளதாக அச்சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை, திருவாரூர், நாகை, சீர்காழி ஆகிய இடங்களில் நடைப்பெற உள்ள ரயில் மறியல் போராட்டத்திற்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள கிரிஷி ஜாக்ரான் இணையதளத்துடன் இணைந்திருங்கள்.

இதையும் படிங்க:

10 நாளில் 1 கோடி வசூல்- பட்டையைக் கிளப்பும் மட்டத்தூர் விவசாயிகள்

கொடுக்கிற 1000 ரூபாயை வங்கி பிடிக்குதா? இனி இதை பண்ணுங்க

English Summary: actor Vishal's promises to One rupee to the farmer Published on: 17 September 2023, 03:30 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.