1. விவசாய தகவல்கள்

அதிக லாபம் தரும் முயல் வளர்ப்பு!

Poonguzhali R
Poonguzhali R
Highly profitable rabbit breeding!

முயலினை வளர்க்க பெரும்பாலும் சிறிய இடம் போதும். பிற கால்நடைகள் போன்று அதிக இடம் இதன் வளர்ப்புக்கு வேண்டியதில்லை. குறிப்பிட்ட சில தீவினங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உண்ணக் கொடுத்தாலே போதும். பெரிதாக செலவு இல்லை.

உணவுகள்:
உணவு எனும் நிலையில் முயலுக்கு, காலையிலும், மாலையிலும் என இரு வேளைகள் உணவு கொடுத்தாலே போதுமானது. அதிலும் குறிப்பாக, பசுந்தீவனம், அடர்தீவனம், முட்டைக்கோஸ் தோல், கேரட் இலை, ஆலமர இலை, வேலிக்காத்தான் இலை, வாழை இலை, முள்ளங்கி இலை, அகத்திக்கீரை, முதலானவற்றை உணவாக வழங்குதல் வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இலையைக் கொடுத்தல் நல்லது.
கம்பு, மக்காச்சொளம், மிருதுவான கோதுமைத்தவிடு, கடலை பிண்ணாக்கு, தாது உப்பு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து ஒவ்வொரு நாளும் மாலை 6 மணியளவில் 100 கிராம் வீதம் கொடுக்க வேண்டும்.

இருப்பிடம்:
முயலுக்கான கொட்டகைகளைக் காற்றோட்டம் இருக்குமாறு அமைத்தல் நல்லது. அதன் கொட்டகைகளைத் தென்னை மற்றும் பனை ஓலைகளால் அமைப்பது நல்லது. வெளிச்சம் குறைவாக இருக்குமாறு அமைத்தல் வேண்டும். தகரத்தில் கொட்டகை அமைக்க நேர்ந்தால் கொட்டகை மீது தென்னை ஓலைகளைப் பரப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் வெயிலின் சூடு பெரிதாக உள் தாக்காமல் இருக்கும்.
பராமரிப்பு:
முயல் பிறந்து ஆறு மாதத்தில் பெண் முயல் பருவத்துக்கு வரும். 8 மாத அளவில் ஆன்முயல் பருவத்துக்கு வரும். இந்நிலையில் பெண் முயலையும், ஆண் முயலையும் கூண்டில் ஒரு இரண்டு நாட்கள் இணைசேர விட்டு பிரித்து வைக்க வேண்டும். இணைசேர்ந்த 28 அல்லது 30-ஆம் நாளுக்குள் குட்டி ஈனும். குட்டிகள் பிறந்து 12-ஆம் நாளில் கண் திறக்கும். அது வளர்ந்து 4 மாத நிறைவில்தான் பாலினம் கண்டுகொள்ள முடியும்.
ஒவ்வொரு முயலுக்கும் 45 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைக் கொடுத்துக் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். அதோடு, முயல்களைத் தூக்கும்பொழுது அதன் காதுகளைக் கொண்டு தூக்கக் கூடாது. அதோடு முயல்களை அடிக்கடித் தூக்கக் கூடாது. அடிக்கடி தூக்குவதால் அதன் ரோமங்கள் உதிர வாய்ப்பு உள்ளது.

மருத்துவக் குணம்:
முயல் இறைச்சியில் குறைவான கொழுப்பும், அதிகமான புரதமும் இருப்பதால் இதை உண்ணுதல் நல்லது. முயல் இறைச்சி குடல்புண், மலச்சிக்கல் முதலானவற்றை நீக்கும். அதோடு முயலின் இறைச்சியில் சோடியத்தின் அளவு குறைவாக உள்ளதால் வயதானவர்கள், இதய நோய் உள்ளவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் உண்ணும் நல்ல இறைச்சியாக இது இருக்கின்றது.

எனவே குறைந்த செலவில் அதிக லாபத்தினை ஈட்டித் தரும் கால்நடை வளர்ப்பாக முயல் வளர்ப்பு இருக்கின்றது.

மேலும் படிக்க

எளிய பராமரிப்பு, அதிக இறைச்சி, நிறைவான லாபம் - முயல் வளர்ப்பு!!

குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்ட ஏற்ற தொழில்: முயல் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்

English Summary: Highly profitable rabbit breeding! Published on: 19 April 2022, 05:38 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.