1. வாழ்வும் நலமும்

கோடை விடுமுறைக்கு தென்னிந்தியாவில் சிறப்பு சுற்றுலா தலங்கள்

Deiva Bindhiya
Deiva Bindhiya
For summer vacation special tourist places in south india

கொளுத்தும் வெயிலில் இருந்து சிறிது நேரம் தப்பிக்க நினைக்கிறீர்களா? அதற்காக நீங்கள் இமயமலைக்கு செல்ல வேண்டாம், தென்னிந்தியாவில் உள்ள, இந்த மலைகள் உங்களுக்கு மன அமைதியையும், நல்ல புத்துணர்ச்சியையும் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வெவ்வேறு வகையான அமைதியை அனுபவிக்க, நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மலை வாசஸ்தலங்கள் பற்றி பார்க்கலாம்.

‘கர்நாடகத்தின் சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும், ஹாசனில் இருந்து 956 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது சக்லேஷ்பூர் எனும் ஊர். இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்சிகளை ரசிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. காபி, தேநீர் தோட்டங்களால், இந்த இடம் சூழப்பட்டிருப்பது சிறப்பாகும்.

சக்லேஷ்பூரில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று பல ஆண்டுகள் பழமையான மஞ்சராபாத் எனும் கோட்டை. அடுத்து, ஹேமாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள 600 ஆண்டுகள் பழமையான சக்லேஷ்வரா கோவில். இதைத் தொடர்ந்து, பிஸ்லே வியூ பாயின்ட்-ஐ, சுற்றியுள்ள மலைகள் மற்றும் அப்பகுதியின் மழைக்காடுகளின் பரந்த காட்சியை, இங்கியிருந்து கண்டு ரசிக்கலாம். இதில் தொலைவில் உள்ள புஷ்பகிரி, தொட்டபெட்டா மற்றும் குமார பர்வத மலைகள் வரை நீங்கள் பார்க்க முடியும்.

ஆந்திராவின் ராஜமுந்திரியில் அமைந்துள்ள பாபி ஹில்ஸ் உண்மையிலேயே ஒரு மறைக்கப்பட்ட ரத்தினமாகும். இந்த மலை பாபிகொண்டா தேசிய பூங்காவில் அமைந்துள்ளது, இங்கு அற்புதமான கோதாவரி ஆறு வளைந்து செல்வதைக் காணலாம்.

இந்த மலைகளின் அழகு பெரும்பாலும் காஷ்மீரில் உள்ள மலைகளுடன் ஒப்பிடலாம். பல சுற்றுலா பயணிகள் பாபி மலையை ‘ராஜமுந்திரியின் மினி காஷ்மீர்’ என்று அழைப்பதுண்டு.

தேவிகுளம், கேரளா

நீங்கள் மூணாருக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், தேவிகுளம் வழியாக செல்லவும். இந்த இடத்தின் பசுமையில் மூழ்கி, அதன் தேயிலை தோட்டங்களில் சுற்றித் திரிய ஆசைக் கொள்வீர்கள், உங்களுக்கு நேரம் இருந்தால், அருகிலுள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்தைப் பார்வையிடலாம்.

பொன்முடி, கேரளா

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்முடி என்பது ‘கோல்டன் ஹில்’ அல்லது ‘கோல்டன் பீக்’ என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த இடம் பகலில் மூடுபனியால் மூடப்பட்டிருப்பதைப் பார்க்க அழகாக இருக்கும். பொன்முடியில் மிகவும் பிரபலம் வரையாடுமோட்டா மலையேற்றமாகும், இது மலைகளின் பரந்த காட்சியை வழங்குகிறது.

வழியில் சாலைக்கு இணையாக எதிர் திசையில் பாயும் கல்லார் ஆற்றில், அழகிய மீன்முட்டி நீர்வீழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமையும். இப்பகுதியில் ட்ரீ ஹவுஸ் வியூ டவர் பார்க்க வேண்டிய மற்றொரு சிறந்த இடமும் உள்ளது.

வால்பாறை, தமிழ்நாடு

அழகிய வால்பாறை மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது, ஆனைமலை புலிகள் காப்பகம். இங்கு யானைகள் மற்றும் காண்டாமிருகங்களால், இங்கு அதிக அளவில் காணப்படும். மேலும் பச்சை தேயிலை தோட்டங்கள் நிறைந்த, இந்த மலைவாசஸ்தலமானது, குழந்தைகளுக்கான புத்தகத்திலிருந்து வெளியே வருவது போல் உணர்வைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் படிக்க:

தமிழகம்: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை தொடக்கம்

எலுமிச்சை மரத்தால் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டலாம்!

English Summary: For summer vacation special tourist places in south india Published on: 20 April 2022, 02:06 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.