1. வாழ்வும் நலமும்

அனைத்து சத்துக்களும் ஒரே அரிசியில் கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? சர்வரோக நிவாரணி "மூங்கில் அரிசி"

Daisy Rose Mary
Daisy Rose Mary

மூங்கிலரிசி, முலரி என்றும் அழைக்கப்படுகிறது. பலர் இந்த மூங்கில் அரிசியை குறித்து கேள்விபட்டிருக்க மாட்டார்கள். இது மூங்கில் மரத்திலிருந்து பெறப்படும் அரிசி ஆகும். ஒரு மூங்கில் வளர்ந்து அதன் கடைசி ஆயுள் காலத்தை நெருங்கும்போது, அது புதிய மரங்களுக்காக விதைகளை உற்பத்தி செய்து அதிகமாக பூக்கத் தொடங்கும்

மூங்கில் விதைகள் மூங்கிலரிசி எனப்படுகிறது. இந்த அரிசி பச்சை நிறத்தில் சிறியதாக இருக்கும். இந்த விதைகள் உலர்த்தப்பட்ட பின்னர் அரிசியாக பயன்படுத்தப்படுகிறது. இது சந்தைகளில் மிக அரிதாகவே கிடைக்கும். இதற்கு காரணம் ஒரு மூங்கில் பூத்த விதை கிடைப்பதற்கு 20 முதல் 120 ஆண்டுக்கு இடைப்பட்ட காலமாகும்.

மூங்கில் அரிசி மற்ற அரிசிகளிலிருந்து வித்தியாசப்படுகிறது. இதன் சுவை கோதுமையை போல இருக்கும். இது அதிக அளவு வாசனையும், இனிப்பு தன்மையும் கொண்டது. இந்த மூங்கில் அரிசி பழங்குடி மக்களின் முக்கிய உணவாக கருதப்படுகிறது. கோதுமையை விட இந்த மூங்கில் அரிசியில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இந்த மூங்கில் அரிசியில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

​மூங்கில் அரிசி உள்ள ஊட்டச்சத்துகள்

உலர்ந்த மூங்கில் விதைகளிலிருந்து மூங்கில் அரிசி நமக்கு கிடைக்கிறது. 100 கிராம் மூங்கில் விதைகளில்

  • கால்சியம் (5.0 மிகி%),

  • இரும்பு சத்து 9.2 (மி.கி%),

  • பாஸ்பரஸ் (18.0 மி.கி%),

  • நிகோடினிக் அமிலம் (0.03 மி.கி%),

  • வைட்டமின் பி 1 (0.1 மி.கி%),

  • கரோட்டின் (12.0 மி.கி)

  • ரைபோஃப்ளேவின் 36.3 (கிராம்)

ஆகிய முக்கிய அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது லினோலிக் அமிலம் மற்றும் பால்மிடிக் அமிலம் ஆகிய ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாகும்.

நீரிழிவு நோய்

இந்த மூங்கில் அரிசியில் லினோலினிக் அமிலத்தின் சிறந்த செறிவு உள்ளது. மேலும் மூங்கிலரிசி சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ரியாகவும் செயல்படுகிறது. சினை குறி நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். சினைக் குறி நோய் பிரச்சனை உள்ள பெண்கள், இந்த மூலிகை அரிசியை தங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்ளும்போது, அது அண்டவிடுப்பின் செயல்பாடுகளை மேம்படுத்தி, நீரிழிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

​எலும்பு பலப்படும்

நமது உடலில் ஏற்படும் வீக்கம், முடக்குவாதம் போன்ற நாட்பட்ட நோய்களுக்கு முக்கிய காரணமாகும். இது நமது உடலில் உள்ள மூட்டுகள் மற்றும் எலும்புகளை பாதிக்கும் ஒரு நோய். இந்த மூங்கில் அரிசியில் ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் போன்ற ஏராளமான பயோஆக்டிவ் சேர்மங்கள் நிறைந்துள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடுகளைக் கொண்டுள்ளது . இது மூட்டு வலி, முடக்கு வாதம் மற்றும் முதுகுவலியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

கொழுப்பைக் குறைக்கும்

மூங்கில் அரிசியில் அதிக நார்ச்சத்து மற்றும் பைட்டோஸ்டெரால் நிறைந்துள்ளது. இது ஒரு தாவர ஸ்டெரால் ஆகும். இது மனித உடலில் உள்ள கொழுப்பை ஒத்ததாகும். பைட்டோஸ்டெரால்கள் அவற்றின் உறிஞ்சுதலைத் தடுத்து மோசமான கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மூங்கில் அரிசியில் உள்ள நார்ச்சத்து கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. 

மனநிலை மாற்றம்

மூங்கில் அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் தயாரிப்புகள் மனநிலை பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. இந்த மூங்கில் அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் பிரவுன் ரைஸ் மனநிலையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. செரோடோனின் மற்றும் டோபமைன் என்ற இரண்டு முக்கிய நரம்பு கடத்திகள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, மனநிலையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

​பல் ஆரோக்கியத்திற்கு

மூங்கில் அரிசியில் வைட்டமின் பி 6 நிறைந்துள்ளது. பற்களில் பாக்டீரியாவால் ஏற்படும் சிதைவு அல்லது முறிவில் இருந்து பாதுகாக்கவும், பற்களில் ஏற்படும் துவாரங்களை தடுக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின் பி6 சத்துக்கள் நிறைந்துள்ளதால் பற்களை வலுப்படுத்த உதவுகிறது.

​வைட்டமின் குறைபாடு

இந்த மூங்கில் அரிசியில் வைட்டமின் பி, வைட்டமின் பி6 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இது சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி, நரம்புகளின் செயல்பாடு மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி ஆகியவற்றிற்கு தேவைப்படுகிறது. பெரும்பாலும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் வைட்டமின் பி6 குறைபாடு காரணமாக, ரத்தசோகை, வலிப்பு, மற்றும் அறிவாற்றல் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த மூங்கில் அரிசியை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, இதில் வைட்டமின் பி6 இருப்பதால் இது போன்ற பிரச்சினைகளை தடுக்க நமக்கு உதவும்.

மேலும் படிக்க...

காலையில் முருங்கை இலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள்!

உடல் ஆரோக்கியத்திற்காக அசைவ உணவுகளைக் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!!

English Summary: All you want to know about the Health benefits of Bamboo rice or Moongil rice

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.