1. வாழ்வும் நலமும்

தீராத நோய்களை சுக்குநூறாக்கும் சுக்குவின் அற்புதப் பயன்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Dried Ginger

நம்மை பாதுகாக்கும் ஒரு மருந்து தான் "சுக்கு". இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது தான் இந்த சுக்கு. இதனை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வப்போது பயன்படுத்தலாம்.

சுக்குவின் மகத்துவங்கள் (Benefits of Dried Ginger)

  • சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
  • சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
  • சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
  • சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
  • சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்ப நிலை வாதம் குணமாகும்.
  • சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்த வழியே போய்விடும்.
  • சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ''சுக்கு நீர்'' காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

மேலும் படிக்க

உயர் இரத்த அழுத்தமா? இந்த பானங்களை பருகி தீர்வு காணுங்கள்

கலர் அப்பளம் சாப்பிட்டால் புற்றுநோய் உண்டாக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி!

English Summary: The amazing benefits of dried ginger in curing chronic diseases! Published on: 19 May 2022, 09:15 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.