Krishi Jagran Tamil
Menu Close Menu

நம் உடலுக்கு நன்மை அளிக்கும் சோற்று கற்றாழை; 7 மருத்துவ குணங்கள்

Friday, 26 April 2019 03:16 PM

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை, எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. கற்றாழையின் மருத்துவ குணங்கள் பலவிதமானவை.

பயன்பாடு மற்றும் மருத்துவ நன்மைகள்:

1. கற்றாழையை நன்கு சுத்தம் செய்து அதனை தினமும் முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள், கண் கருமை, சுருக்கம், முகத்தில் வறட்சி, முகத்தில் என்னை தன்மை, அனைத்தும் நீங்கிவிடும்.

2. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழையை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வழிகள், மற்றும் வயிற்றுப்போக்கு, வாயுவு , ஆகியவை சீராகும்.

3. தலையில் உள்ள பொடுகு, வறட்சி தன்மை, புண், ஆகியவை நீங்கி கூந்தல் வளர உதவுகிறது. கற்றாழையுடன் சிறிது என்ன சேர்த்து தடவினால் தலைமுடி வெடிப்பு குறைந்து முடி நன்கு வளர உதவும்.

4. கற்றாழையை சுத்தம் செய்து அதை உடலில் கருமை அடைந்திருக்கும் கைகள், கால்கள், முட்டிகள், கழுத்து, விரல்கள், ஆகிய பகுதிகளில் தேய்த்து வர கருமை நீங்கி சருமம் பளபளக்கும்.

5. கற்றாழையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெப்பம் நீங்கி உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

6. நீரிழிவி இருப்பவர்கள் தினமும் கற்றாழையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் சர்க்கரை அளவு கணிசமாக குறைந்துவிடும் என்று ஆராய்ச்சியின் கண்டு பிடிப்பில் உறுதியாகியுள்ளது .

7. மனிதர்களுக்கு பல காரணங்களால் அவர்களின் உடலில் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளரக்கூடிய அபாயம் உள்ளது. இந்த  கொடிய செல்களை அளித்து உடலுக்கு ஆரோகியத்தை கொடுக்கும்  ஆற்றல் கற்றாழைக்கு உண்டு. எனவே புற்று நோய் ஏற்படாமல் தடுக்க, மற்றும்  புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கற்றாழையை மருத்துவ உணவாக பயன்படுத்துவது நல்லதாகும்.

aloe Vera aloe Vera uses medicinal benefits health care
English Summary: 7 medicinal uses of aloe Vera

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. வாழையின் விலை இனி, உயருமா? குறையுமா? ஆய்வில் வேளாண் பல்கலைக்கழகம் தகவல்!
  2. காரீப் சந்தைப் பருவத்திற்கு பருப்புகள், எண்ணெய் வித்துகள் கொள்முதல் -மத்திய அரசு ஒப்புதல்!
  3. இயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை ஊக்கத்தொகை - விவசாயிகளுக்கு அழைப்பு!
  4. காந்தி ஜெயந்தி அன்று 1.16 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்!
  5. அடையாறு ஆற்றை அகலப்படுத்த, பொதுப்பணித்துறை மும்முரம்! சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி!
  6. PM KISAN முறைகேடு :மேலும் 4 பேர் கைது- வெளிமாநிலத்தவர் சேர்க்கப்பட்டிருப்பதும் அம்பலம்!
  7. மாற்றி யோசிக்க வைத்த மல்பெரி - விற்பனை செய்து வருமானம் பார்த்த விவசாயிகள்!
  8. அதிக மகசூல் பெறத் துத்தநாகச் சத்து அவசியம்- வேளாண்துறை அறிவுறுத்தல்!
  9. கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மூலிகை சானிடைசர் தயாரிக்கலாம் வாங்க!
  10. பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கல்விக்கண் திறக்கும் ஈஷா!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.