1. வாழ்வும் நலமும்

முகப்பருக்களை நீக்க எளிய வழிகள்!!!

Poonguzhali R
Poonguzhali R
Simple Ways To Remove acne: Tips!

பரு என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?, அதை வராமல் தடுப்பது எப்படி?, வந்த பின் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும்? முதலான காரணக் காரியங்களை இப்பகுதியில் ஆராயலாம்.

முகப்பரு எவ்வாறு உருவாகிறது?

பொதுவாக, உடலில் கொழுப்புப் பொருள் அதிகமானால் அது வியர்வை மூலமாக வெளியேறும். ஆனால் சில சமயங்களில் கொழுப்புப் பொருளானது வியர்வை மூலம் வெளியேறாமல் முகத்தில் தேங்கும். அந்த தேங்குகின்ற கொழுப்புப் பொருட்களே பருக்களாக உருமாறுகின்றன. அது போல முகம் கழுவாமல் பவுடர் போட்டாலும் பரு வரும்.  ஏனெனில் முன்னர் உள்ள எண்ணெய் பசையுடன் பவுடரைப் பயன்படுத்துவதால் அது மேலும் சருமத்திற்குத் தீங்கை விளைவிக்கும்அதோடு ஒரு பரு வந்து விட்டால் அதை நகம் படாமல் பாதுக்காப்பது நல்லது. சிலர் பருவைக் கிள்ளி விட்டால், பரு மேலும், மேலும் அதிகமாக வரும் நிலை ஏற்படும்.  எனவே பருவினை அது சரியாகும் வரை நகம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முகப்பரு வராமல் எவ்வாறு தடுப்பது?

ஒருமுறை பரு வந்து விட்டால் அதை கிள்ள கூடாது. அத்துடன் உணவில் கொழுப்புப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.  உதாரணமாக சாக்லெட், ஐஸ்க்ரீம், தயிர், மாமிசம், எண்ணையில் வறுத்த மற்றும் பொறித்த பலகாரங்களை சாப்பிடக் கூடாது.. இது தவிர ஒருநாளைக்கு குறைந்தது எட்டு டம்பளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.  அதோடு, பொதுவாக ஆரோக்கியமான தூக்கத்தை கடை பிடிப்பது நல்லது. பச்சைத் தண்ணீரில் குளிப்பது நல்லது.  மேலும்,  அதிக அளவில் எண்ணெய் இல்லாத உணவை சாப்பிடுவது நல்லது.

முகப்பருவை நீக்கக் குறிப்புகள்

  • கடலை மாவோடு சந்தனப்பொடி, தயிர் மற்றும் எழுமிச்சை சாறு சேர்த்துக் குழைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி விட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால் முகப்பரு நீங்கும்.
  • வேப்பிலை கொழுந்தை நன்கு கழுவி சுத்தம் செய்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசிவிட்டு 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.  நாள்தோறும் இதைச் செய்வதன் மூலம் முகப்பரு நீங்கும். 
  • சிறிதளவு பாசிப்பயிறு மாவு, எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.
  • சிறிதளவு படிகாரத்தை நீரில் கரைத்துp படிகாரம் கரைக்கப்பட்ட நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.
  • தினமும் நன்கு வியர்வை உடலிலிருந்து வெளிவரும் அளவிற்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் சிறு துவாரங்களில் உள்ள அழுக்குகள் வியர்வையோடு சேர்ந்து வெளியில் வரும்.

மேலும் படிக்க..

இனி பேஷியல் வீட்டிலேயே செய்யலாம்..!

வெயில் காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க சில டிப்ஸ் !!

இயற்கையான முறையில் ஷாம்பூ தயாரிப்பது எப்படி?

English Summary: Simple Ways To Remove acne: Tips!!! Published on: 12 April 2022, 04:21 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.