Krishi Jagran Tamil
Menu Close Menu

யூரியாவிற்கு மாற்றான அமுதக் கரைசல் - தயாரிப்பது எப்படி?

Saturday, 17 October 2020 03:58 PM , by: Elavarse Sivakumar
Elixir Alternative to Urea - How to Prepare

செடிகள் செழிப்பாக வளர யூரியாவிற்கு பதிலாக இயற்கை மருந்தான அமுதக்கரைசலைப் பயன்படுத்தலாம்.

பயிர் செழிப்பாக வளர, யூரியா மிகவும் அவசியம் என்ற தவறான எண்ணம், நம் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. நைட்ரஜன் சத்தை செடிகள் கிரகிப்பதற்காகவே, உப்புத் தன்மை அதிகம் உள்ள யூரியாவை பயன்படுத்துகிறோம்.

நுண்ணுயிரிகள் அழிகின்றன

செடிகளின் வேர்களில் நீர்ச்சத்து இருக்கும் வரை தான், நாம் போடும் யூரியாவை உறிஞ்சும். மீதி உள்ள யூரியா பூமிக்கடியில் சென்று தங்கி விடும். இப்படி ரசாயன உரங்களும், யூரியாவும் அதிகப்படியாக பூமியில் சேருவதால், இயற்கையாக வளரும் நன்மை செய்யும் பல நுண்ணுயிரிகள் அழிந்து விடுகின்றன. எனவே யூரியாவிற்கு பதிலாக அமுதக்கரைசலைப் பயன்படுத்தி விவசாயிகள் அதிகளவில் பயனடையலாம். மண்ணும் வளம் பெறும். நமக்கும் நஞ்சில்லா உணவு கிடைக்கும்.

தயாரிக்கும் முறை (Prepartion)

 • ஒரு பாத்திரத்தில், 5 கிலோ சாணம், 3 கிலோ மாட்டுச் சிறுநீர், அரை கிலோ வெல்லத்தை கலந்து, மூடி வைத்து நொதிக்க விட வேண்டும்.

 • இன்னொரு பாத்திரத்தில் நன்கு கனிந்த, 15 வாழைப்பழம், கால் கிலோ வெல்லத்தை கலந்து நொதிக்க விட வேண்டும்.

 • இரண்டு நாட்கள் கழித்து, இந்த இரண்டு கலவையையும் ஒன்றாக்கி, ஓரிரு நாட்களுக்கு நொதிக்க வைக்க வேண்டும்.

 • இதனுடன், தலா ஒரு கிலோ ரைசோபியா, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் கலந்து, ஒரு இரவு நொதிக்க விட வேண்டும்.

 • இந்தக் கரைசல், தோசை மாவு பதத்திற்கு மாறி இருக்கும். இதோடு, 2 கிலோ கடலைப் புண்ணாக்கு கலந்து, சில மணிநேரம் வைத்திருந்தால் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, புட்டு பத்திற்கு மாறிவிடும். இதை, ஒரு ஏக்கர் நெல் வயலில் பரவலாக தெளிக்க வேண்டும்.

 • அடுத்த சில நாட்களில் மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகி, பயிர் பச்சை பிடித்து, ஆரோக்கியமாக வளர துவங்கி விடும்.

 • இதுதவிர, இலை, தழைகளை கொண்டே இடுபொருள் தயாரித்து, இலைவழி தெளிப்பாகவும், ஊட்டச்சத்து கொடுக்கலாம்; இது, பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படும்.


தகவல்
பாஸ்கரன்
இயற்கை விவசாயி
தேனாம்படுகை கிராமம்
தஞ்சாவூர் மாவட்டம் 

மேலும் படிக்க...

PMKSY : 100% மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

விதை உற்பத்திக்கு மானியம் பெற அழைப்பு - விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

யூரியாவிற்கு மாற்று எது இயற்கை மருந்து அமுதக்கரைசல் பயிர்வளர்ச்சியைத் தூண்டும் Elixir Alternative to Urea - How to Prepare
English Summary: Elixir Alternative to Urea - How to Prepare

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. 45 நிமிடத்தில் கடன் வழங்கும் SBI! - உங்களை தேடி வரும் சூப்பர் திட்டம்!
 2. தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!
 3. ABVKY : அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா மூலம் வேலை இழந்தவர்கள் சம்பளம் பெறுவது எப்படி?
 4. கோயம்புத்தூர் உழவர் சந்தையில் காய்கறிகள் விலை பற்றிய ஆய்வு!
 5. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!!
 6. முருங்கை சாகுபடியை ஊக்குவிக்க, தோட்டக்கலை துறைக்கு ரூ. 5கோடி நிதி ஒதுக்கீடு!
 7. கதிர் அடிக்கும் களங்கள் இல்லாததால் விவசாய பொருட்களை சாலையில் உலர வைக்கும் விவசாயிகள்!
 8. கிசான் முறைகேடு : பணத்தை திரும்ப செலுத்தாவிட்டல் அரசு சலுகைகள் நிறுத்தம்!
 9. பாதுகாப்பான வாழ்க்கைக்கு பாரம்பரிய அரிசி வகைகள் !
 10. ஏழைகளின் குளுக்கோஸ் இளநீர் - நன்மைகள்!!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.