1. தோட்டக்கலை

மா, கொய்யா, ஆரஞ்சு, போன்ற பழமரங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் கவனத்திற்கு

Deiva Bindhiya
Deiva Bindhiya
Farmers Attention: who have fruit trees like mango, guava, orange

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாத இறுதி வரை நிலவ இருக்கும் அதிகமான வெப்பத்தை அடிப்படையாகக்கொண்டு நமது மரங்களை அதிக அளவில் சாறு உறிஞ்சும் பூச்சிகளும் தண்டுதுளைப்பான் உருவாக்கும் பூச்சிகளும் தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் எந்த இடத்தில் உள்ள தோட்டமாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இயற்கை வழி அல்லது உயிர் வழி இயற்கை பாதுகாப்பு திரவங்களை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வருவது நன்மை பயக்கும்.

இயற்கை வழி திரவங்களில்:

  • வேப்ப எண்ணெய் கரைசல் 10 லிட்டர் தண்ணீருக்கு, 100 மில்லி கலந்து சிகைக்காய் தூளில் கரைத்து வடிகட்டி தெளித்து வரலாம்.
  • வேப்பங்கொட்டை கரைசல் 100 லிட்டர் தண்ணீருக்கு 5 கிலோ எடுத்து கரைத்தும் தெளிக்கலாம்.
  • மூலிகை பூச்சி விரட்டி அல்லது அக்னி அஸ்திரம் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி கலந்து தெளித்திடலாம்.
  • கற்பூர கரைசல் தெளிப்பது ஆக இருந்தால் பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலந்து தெளித்திடலாம்.

மேலும் படிக்க: 

அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்?

PM-Kisan திட்டம் - பயனாளிகளுக்கு அதிர்ச்சி!

இயற்கைவழி திரவங்களை வாரம் ஒருமுறை கூட மாலை வேளையில் தெளித்துக் கொள்வது பலவகைகளில் நன்மை தரும் என்பது குறிப்பிடதக்கது.

உயிர்வழி திரவங்களில்:

10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மெட்டாரைசியம் 75 மில்லி பேசிலஸ் துரிஞ்சி என்சிஸ் என்ற திரவம் கலந்து, அதனுடன் 100 கிராம் அளவுள்ள மைதா மாவை பசையாக காய்ச்சி தண்ணீருடன் கலந்து, மீண்டும் மேற்கண்ட திரவத்தில் கலந்து மாலை வேளையில் தெளிக்க தண்டுதுளைப்பான் வரும் பகுதிகளில், இது நல்ல பலன் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உயர்கல்வி உதவித் தொகை திட்டம்: விண்ணப்ப விவரம் இதோ!

10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மெட்டாரைசியம், 75 மில்லி வெர்ட்டிசீலியம் லக்கானி என்ற திரவத்தை கலந்து, அதன் உடன் 100 கிராம் அளவுள்ள மைதா மாவை பசையாக காய்ச்சி தண்ணீருடன் கலந்து மீண்டும் மேற்கண்ட திரவத்தில் கலந்து மாலை வேளையில் தெளியுங்கள், இதனால் சாறு உறிஞ்சும் பூச்சிகளை முழுமையாக தவிர்த்திடலாம்.

உயிர்வழி திரவங்களை முடிந்த வரை 10 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை தோட்டத்தின் இருப்பைப் பொறுத்து தெளித்துவர நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க:

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்: அறிந்திடுங்கள்

பூச்சித் தாக்காத தினை சாகுபடி: சில நுணுக்கங்கள்!

English Summary: Farmers Attention: who have fruit trees like mango, guava, orange Published on: 29 June 2022, 05:50 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.