1. செய்திகள்

கோடை வெயில் - வாடும் பயிர்கள் : கரும்பு பயிர் பாதுகாப்பில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டியவை!!

Daisy Rose Mary
Daisy Rose Mary


கோடை வெயில் காரணமாக கரும்பு பயிர்கள் வாடி வருவதால் விசாயிகள் கவலையடைந்து வருகின்றனர். இந்த கோடை வெயிலை சமாளிக்க கரும்பு பயிர்களில் இந்த வகையான மேலாண்மை முறைகள் கடைபிடிக்க வேண்டும் என வேளாண்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

கோடை வெயில் - வாடும் பயிர்கள்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, தாராபுரம், உடுமலை உள்ளிட்ட பல இடங்களில், 850க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ள நிலையில் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் வாடி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பயிர் பாதுகாப்பு வழிமுறை குறித்து, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையத்தினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பயிர் பாதுகாப்பு - வேளாண்துறை அறிவுரை

கரும்பு விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய சாகுபடி முறை குறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில்,

  • காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் கரும்பு பயிர் சாயாமல் இருக்க அவற்றின் தோகையை உரிக்க வேண்டும்.

  • முன் மற்றும் இடைப்பட்ட கரும்பில், இளங்குருத்து புழு தாக்குதல் தென்படும்.இதனை தடுக்க, அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

  • பூச்சி தாக்குதல் தென்பட்டால், ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் தண்ணீரில், கார்டால் ஹைட்ரேட் குளோரைடு, 2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.

இவ்வாறு சில எளிமையான ஆலோசனை வழங்கினர். மேலும் தகவல்களுக்கு விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை அணுகி தெரிந்துகொல்லலாம் என்றும் வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

வெப்ப அயற்சியிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க தெளிப்பான்களை உபயோகிக்கலாம்! ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்!

தென்னையில் வேரூட்டம் பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்

English Summary: Agriculturist Advises farmers on How to protect sugarcane crops during summer

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.