1. செய்திகள்

ரூ.30 கோடியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அறிவிப்பு!

Poonguzhali R
Poonguzhali R
Announcement of new suburban bus station at Rs.30 crore!

ரூ.30 கோடியில் புறநகர் பேருந்து நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலை அருகே சுமார் பத்து ஏக்கரில் 'கிரேடு ஏ' புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என நகராட்சி கமிஷனர் என்.ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.

நாகப்பட்டினம் புறநகர் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.30 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை சட்டசபையில் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு அறிவித்தார். புதிய பேருந்து நிலையம் மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பேருந்து நிலையம் குறித்து நகராட்சி கமிஷனர் என்.ஸ்ரீதேவி கூறுகையில், "கிழக்கு கடற்கரை சாலை அருகே சுமார் பத்து ஏக்கரில் 'ஏ' கிரேடு புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் எனவும், வரும் மாதங்களில் நிலம் இறுதி செய்யப்பட்டு கையகப்படுத்தப்படும்," எனவும் கூறியுள்ளார். தற்போதைய பேருந்து நிலையம் நாகப்பட்டினம் அருகே உள்ள வெளிப்பாளையம் அருகே உள்ளது. பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் இது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது., மேலும் இது 4.37 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.

கிரேடு பி' பேருந்து நிலையம் வழியாகச் சுமார் 24 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், பல ஆண்டுகளாக நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் தேவைப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.. இது தொடர்பாக நாகப்பட்டினம் நகராட்சியில் இருந்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

விரிவான திட்ட அறிக்கை பைப்லைனில் உள்ளது எனவும், அது விரைவில் தயாரிக்கப்படுவதோடு, திட்டம் சில மாதங்களில் தொடங்கும்," எனவும் அதிகாரி கூறியிருக்கிறார். நாகப்பட்டினம் எம்எல்ஏ ஜே முகமது ஷானவாஸ் அரசின் இந்த அறிவிப்பை பாராட்டினார். இது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதை விரைவில் நிறைவேற்றிட அரசை கேட்டுக்கொள்வதாக எம்எல்ஏ ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

தஞ்சாவூர்: 22,000 டன் சம்பா, தாளடி கொள்முதல் குறைவு!

17 பழைய அணைகளை சீரமைக்க ரூ.35 கோடி ஒதுக்கீடு!

English Summary: Announcement of new suburban bus station at Rs.30 crore! Published on: 04 April 2023, 05:12 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.