1. செய்திகள்

நீரைவிலக்கிக் கொண்டு பாய்ந்த படகுகள்! துடுப்புப் போட்டு அசத்திய ராகுல் காந்தி!

Poonguzhali R
Poonguzhali R

Rahul Gandhi

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநாடு: கலந்து கொண்டார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நீரைவிலக்கிக் கொண்டு பாய்ந்த படகுகள்! துடுப்புப் போட்டு அசத்திய ராகுல் காந்தி, வரத்து அதிகரிப்பால் கடும் சரிவில் உள்ளது முருங்கை-யின் விலை, இந்திய விவசாயிகள் கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.

மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநாடு: கலந்து கொண்டார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர், மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் இயந்திரம் பெறும் வயதினை 45 லிருந்து 60 என உயர்த்தி உள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு என 2022-23 ஆண்டில் ரூ. 838 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன எனவும் கூறியுள்ளார். மேலும், இந்த மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, தாம்பரம் ராஜா, மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் சண்முகம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்டோர் கலந்துகோண்டனர்.

நீரைவிலக்கிக் கொண்டு பாய்ந்த படகுகள்! துடுப்புப் போட்டு அசத்திய ராகுல் காந்தி!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்ற படகுப் போட்டியில் துடுப்புகளை வீசி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி படகு ஓட்டியது பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. பாரத் ஜோடோ யாத்ரா என்றழைக்கப்படும் இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பிரச்சாரப் பயணம் நடத்தி வரும் ராகுல் காந்தி தற்பொழுது கேரள மாநிலத்தில் உள்ளார். இந்நிலையில் ஆலப்புழா புன்னமடா ஏரியில் நடைபெற்ற பாரம்பரிய பாம்பு படகுப் போட்டியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் துடுப்புகளைப் போட்டு படகை இயக்கியது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய விவசாயிகள் கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை!

ஹரியான கிசான் கிளப் தலைவர் விஜேந்திர சிங் தலால், விவசாயி ரமேஷ் சவுகான் மற்றும் புதுமை விவசாயி சர்தார் ஓம்பீர் சிங் ஆகியோர் கிரிஷி ஜாக்ரன் தலைமை அலுவலகத்தைப் பார்வையிட்டனர். அலுவலகத்திற்கு வந்திருந்த விவசாயிகள் அனைவரும் தங்கள் அனுபவங்களையும் எண்ணங்களையும் கிரிஷி ஜாக்ரன் குழுவினரிடையே பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கிரிஷி ஜாக்ரன் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான எம்.சி.டொமெனிக், இயக்குநர் ஷைனி டொமினிக் மற்றும் கிரிஷி ஜாக்ரன் குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

இந்திய ட்ரோன் கூட்டமைப்பின் தலைவர் கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை!

இந்திய ட்ரோன் கூட்டமைப்பின் தலைவர் ஸ்மிட் ஷா இன்று கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை தந்தார். கிரிஷி ஜாக்ரன் நிறுவனத்தின் நோக்கங்கள், சாதனைகள், விவசாயிகளுக்குப் பயன்படக்கூடிய வகையில் எவ்வகையில் கிரிஷி ஜாக்ரன் செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் கிரிஷி ஜாக்ரனின் 26 ஆண்டு காலச் செயல்பாடுகள் காணொளியாகக் காட்சிப்படுத்தப்பட்டது. ஸ்மிட்ஷா தனது கருத்துக்களைக் கிரிஷி ஜாக்ரன் குழுவினரிடையே பகிர்ந்துகொண்டார். இச்சந்திப்பில் கிரிஷி ஜாக்ரன் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான எம்.சி.டாம்னிக், இயக்குநர் சைனி டாமினிக் மற்றும் கிரிஷி ஜாக்ரன் ஊழியர்கள் பங்குபெற்றனர்.

மேலும் படிக்க

இந்திய ட்ரோன் கூட்டமைப்பின் தலைவர் ஸ்மித் ஷா கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை!

இன்றைய வேளாண் செய்திகளும் மானியத் தகவல்களும்!

English Summary: Boats that have flown with water! Rahul Gandhi who put on a paddle and lied!

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.