1. செய்திகள்

இயற்கை விவசாயம் செய்ய அழைப்பு! மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!!

Poonguzhali R
Poonguzhali R
organic farming

விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட முன்வரவேண்டும் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ளார். இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் ஆகியன மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் தொகையில் 65 முதல் 75 சதவீதம் பேர் விவசாயத்தினையே தங்களின் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். மேலும் வளர்ந்து வருகின்ற மக்கள் தெகையின் எண்ணிக்கைக்குத் தேவையான உணவு மற்றும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திட இயற்கை விவசாயம் செய்து, நஞ்சில்லா உணவு பொருட்களை உற்பத்தி செய்வதில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் என்பது மிக முக்கிய அங்கமாக விளங்குகிறது என்பதை ஆட்சியர் நினைவுப்படுத்தியுள்ளார்.

விவசாயம் செய்வதில் வேதியியல் பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் மண்ணும் நீரும் நச்சுத்தன்மை அடைந்து மனித வாழ்வு நலிவடைவதற்கான வாய்பபினிய அதிகம் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, இதனை தவிர்க்கும் விதமாக இயற்கையான எருவைப் பயன்படுத்தி ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இல்லாமல் வேளாண்மை செய்யும் நடைமுறியயினைப் பழக வேண்டுமெனக் கூறியுள்ளார்.

அங்கக வேளாண்மையினை ஊக்குவிக்கும் நிலையில் தமிழக அரசு அங்கக வேளாண்மை கொள்கை அண்மையில் வெளியிட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், பண்ணை மகளிர்ன் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடையே முறையான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அங்கக வேளாண்மையினை ஊக்குவிக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் விவசாயிகளுடன் இணைந்த குழுக்கள் அமைத்திட தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு, அங்கக வேளாண்மையினை ஊக்குவிக்கும் வகையில், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்திற்கு 15 வட்டாரங்களில் 400 எக்டர் பரப்பளவில் 20 தொகுப்புகள் உருவாக்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது என்று தகவல் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதனை ஊக்குவிக்கும் வகையில், சான்று கட்டணமான எக்டருக்கு ரூ. 2,000 வழங்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1 எக்டருக்குக் குறைவாக இருக்கும் விவசாயிகளும் இணைந்து பயன்பெறலாம். அதோடு இந்த திட்டத்தின் கீழ் விளைவிக்கப்படும் உணவு பொருள்கள் மனித உடலுக்கு ஊறு விளைவிக்காத காரணத்தினால் அதிக அளவில் மக்களிடம் வரவேற்பினையும் அதிக லாபத்தினையும் பெற்றுத் தரும் திட்டமாகச் செயலபடுகிறது.

இந்த திட்டம் குறித்த முழு விபரங்களைத் தெரிந்து கொள்ள விவசாயிகள் அருகில் இருக்கும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

இலவச ஒரு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி|விவசாயிகளுக்கு அழைப்பு!

திடீரென அதிகரித்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து! விவசாயிகள் மகிழ்ச்சி!

English Summary: Call for organic farming! District Collector's request!! Published on: 15 July 2023, 04:21 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.