1. செய்திகள்

காவிரி நீர் மேலாண்மை|தங்கம் விலை உயர்வு|வெற்றிலை விற்பனை| ரூ.8¾ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள்

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan

1.காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20வது கூட்டம் இன்று நடைபெற உள்ளது

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20வது கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகா எழுப்பும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாத பட்டியலில் சேர்க்கவில்லை. ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

2.தங்கத்தின் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₨.240 உயர்ந்து ₨.45,040‬க்கு விற்பனை

ஒரு கிராம் தங்கம் ₨5,630-க்கு விற்பனை

3.அந்தியூரில் வெற்றிலை விற்பனை அமோகம்!

அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள். இதில் 100 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ராசி வெற்றிலை 80 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையும், பீடா வெற்றிலை 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையும் ஏலம் போனது. செங்காம்பு வெற்றிலை ஒரு கட்டு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்றது. மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வெற்றிலை விற்பனையானது.

4.மக்காச்சோளம் விலை உயர்வு

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில்வேளாண்ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். தற்ேபாது வரத்து குைறந்துள்ளதால் கடந்த வாரம் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்றது தற்போது ரூ.22-க்கு விற்பனையாகிறது.


5.ஈரோட்டில் காய்கறி விற்பனை அமோகம்

ஈரோடு சம்பத்நகர், பெரியார்நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் விவசாயிகளும் அதிக அளவிலான காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். அதுபோல் நேற்று நடந்த சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்காக காய்கறிகளை கொண்டு வந்தனர். பொதுமக்கள் ஆர்வமாக வந்து காய்கறிகளை வாங்கி சென்றார்கள். மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் மொத்தம் 64.19 டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டதாகவும், ரூ.17 லட்சத்து 32 ஆயிரத்து 502-க்கு காய்கறிகள் விற்பனையானதாகவும் உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

6.தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.8¾ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.8¾ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது. தர்மபுரி தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று 1 டன் 794 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.565-க்கும், குறைந்தபட்சமாக ரூ.380-க்கும், சராசரியாக ரூ.488.83-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.8 லட்சத்து 77 ஆயிரத்து 127 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

7.மாட்டு சிறுநீர் அருந்துவதை தவிர்க்குமாறு இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் விளக்கம்

மாட்டு சிறுநீரில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்கலாம் என்பதால் அவை மனிதர்கள் உட்கொள்ள ஏற்றது அல்ல என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த போஜ் ராஜ் சிங் தலைமையில் மூன்று பிஎச்.டி மாணவர்கள் கொண்ட குழு நடத்திய ஆய்வில், பசுக்கள் மற்றும் காளைகளின் சிறுநீரில் மாதிரிகள் குறைந்தது 14 வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டிருப்பதைக் கண்டறியப்பட்டுள்ளது. இது வயிற்று நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் எனவும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

எனவே,பசுவின் சிறுநீரை ஒருபோதும் மனிதர்கள் உட்கொள்ள பரிந்துரைக்க முடியாது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) உறுதியாகக் கூறியுள்ளது.

மேலும் படிக்க

சோயாமீலுக்கு அடிச்ச லக்- போட்டி போட்டு கொள்முதல் செய்யும் அண்டை நாடுகள்

தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை!

English Summary: Cauvery Water Management | Gold Price Rise | Leaf Sale | Silk cages for Rs.8¾ lakhs Published on: 11 April 2023, 04:00 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.