1. செய்திகள்

100-ஐ தொட்ட வெங்காயம் விலையை ரூ.25-க்கு இழுத்து வந்த அரசு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
the price of onion

கரீஃப் பருவப் வெங்காய பயிர் வரத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில், வெங்காயம் கிலோ ஒன்றினை ரூ.25 என்ற மானிய விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கிலோ ரூ.100 என்கிற விலையினை எட்டியுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்திய உணவு தயாரிப்பு முறைகளில் தவிர்க்க முடியாத ஒன்று வெங்காயம். அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நுகர்வோர் நலத் துறை, இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு (என்.சி.சி.எஃப்), இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு (NAFED), மத்திய பண்டகசாலை,  மாநில கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களால் இயக்கப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலம் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.25 என்ற மானிய விலையில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

2023, நவம்பர் 2-ஆம் தேதி வரை, நாஃபெட் (NAFED) 21 மாநிலங்களில் உள்ள 55 நகரங்களில் நிலையான விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் உட்பட 329 சில்லறை விற்பனை மையங்களை அமைத்துள்ளது. இதேபோல், என்.சி.சி.எஃப் (NCCF) 20 மாநிலங்களில் 54 நகரங்களில் 457 சில்லறை விற்பனை மையங்களை அமைத்துள்ளது.

ரபி மற்றும் கரீஃப் பயிர்களுக்கு இடையிலான பருவகால விலை ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதற்காக, ரபி பருவ வெங்காயத்தை கொள்முதல் செய்வதன் அளவினை அரசு உயர்த்தியுள்ளது. 

2022-23 ஆம் ஆண்டில் 2.5 லட்சம் மெட்ரிக் டன் என்பதிலிருந்து இந்த ஆண்டு, இருப்பு அளவு 7 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 5.06 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, மீதமுள்ள 2 இலட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: 1.42 லட்ச கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை- அரசாணை வெளியீடு

பருவ மழை மற்றும் வெள்ளை ஈ தாக்குதலால் ஏற்பட்ட விநியோக இடையூறுகள் காரணமாக 2023 ஜூன் கடைசி வாரத்தில் இருந்து தக்காளியின் விலை உயர்ந்தபோது, மத்திய அரசு இதைப் போல் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. தக்காளி உற்பத்தி செய்யும் கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து என்.சி.சி.எஃப் மற்றும் நாஃபெட் மூலம் தக்காளியை கொள்முதல் செய்து முக்கிய நுகர்வு மையங்களில் நுகர்வோருக்கு  மானிய விலையில் வழங்கியது.

தக்காளி சில்லறை விலை ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஒரு கிலோவுக்கு ரூ.140 ஆக இருந்த நிலையில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் கீழ் அகில இந்திய சராசரி சில்லறை விலையானது செப்டம்பர், 2023 முதல் வாரத்தில் கிலோவுக்கு ரூ.40 ஆக குறைந்தது.

பருப்பு வகைகள் பெரும்பாலான இந்திய குடும்பங்களுக்கு ஊட்டச்சத்துக்கான முக்கிய ஆதாரமாகும். சாதாரண குடும்பங்களுக்கு துவரம் பருப்பு தொடர்ந்து கிடைப்பதையும், மலிவு விலையில் இருப்பதையும் உறுதி செய்வதற்காக, மத்திய அரசு பாரத் பருப்பை 1 கிலோ பேக்கிங்கு ரூ.60/கி மற்றும் 30 கிலோ பேக்கிங்கு கிலோ ஒன்றுக்கு ரூ.55 என்ற மானிய விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பாரத் தால் நுகர்வோருக்கு சில்லறை விற்பனைக்காகவும், ராணுவம், CAPF மற்றும் நலத் திட்டங்களுக்கு NAFED, NCCF, Kendriya Bhandar, Safal மற்றும் தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள மாநில கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கம் மூலமாகவும் கிடைக்கிறது.

இதையும் காண்க:

ஆரஞ்ச் அலர்ட் உட்பட 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

TNAU சார்பில் விவசாயிகளுக்காக அடுத்தடுத்து 3 பயிற்சிகள்- முழு விவரம் காண்க

English Summary: Centre initiates the price of onion from Rs 100 to Rs 25 Published on: 05 November 2023, 10:42 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.