1. செய்திகள்

முட்டை விலை அதிகரிப்பு

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக 555 காசுகளாக இருந்த நிலையில் நேற்று NECC  சேர்மன் டாக்டர் செல்வராஜ் முட்டை விலையை மேலும் பத்து காசுகள் உயர்த்தினார். இதனால் தற்போதைய முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 565 காசுகளாக உயர்த்து.

2, பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்

நேற்று (8.01.2023)சென்னையிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட அரங்கில்  கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் எஸ்.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுடன் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் காணொளிக்காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு,உணவு மற்றும் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்களின் பதிவாளர் ஆ.சண்முகசுந்தரம், உணவு வளங்கள் துறை ஆணையர் ராஜாராம், தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் பிரபாகர், வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை, மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  பலர்  கலந்துகொண்டனர்.

3, முதலமைச்சரின் தொலைநோக்கு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு கூட்டம்.

நேற்று சேப்பாக்கம், வேளாண்மை இயக்குனராக கூட்டரங்கில், மாண்புமிகு வேளாண்மை-உழவர் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் அவர்கள் தலைமையில், வேளாண்மை-உழவர் நலத்துறையின் அனைத்து திட்டங்கள், அனைத்து அறிவிப்புகள் மற்றும் மாண்புமிகு முதலமைச்சரின் தொலைநோக்கு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து, ஆய்வு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, சக்கரை துறை ஆணையர் விஜயராஜ்குமார், வேளாண் வணிக இயக்குனர் நடராஜன், வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

4,காய்கறி மீன்விலை அதிகரிப்பு

மீன் மற்றும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை மிகவும் உயர்ந்துள்ளது. மதுரை மார்க்கெட்களில் ரூ.40, 50 என்று விற்கப்பட்ட சின்னவெங்காயம்  இப்பொழுது கிலோ ரூ.90 க்கும்  நாகப்பட்டினத்தில் சிங்கி இறால் ரூ.4500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது ,மார்கழி  மாத குளிரினால் காய்கறி வரத்து குறைந்துள்ளது என்று வியாபாரிகள் தகவல்.

5,மதுரை விமான நிலையம்  24 மணிநேரமும் செயல்படுவதை வரவேற்கிறது TNCCI

தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை (டிஎன்சிசிஐ), மதுரை கோயில் நகரத்தில் விமான நிலையத்தை 24 மணி நேரமும் செயல்பட வைக்கும் நடவடிக்கையை வரவேற்றுள்ளது, ஏனெனில் இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியாகும், மாநிலத்தின் தென் பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையை நிச்சயம் இதனால்  அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. மேலும் இது நாட்டிற்கு கணிசமான அந்நிய செலாவணியை அதிகரிக்கவும் ஈட்டவும் உதவும் என்று மதுரை டிஎன்சிசிஐ தலைவர் என்.ஜெகதீசன்  சுட்டிக்காட்டினார்.

6,விவசாயத்திற்கு தேவையான உரம் மற்றும் விதைகள் இருப்பதாக ஈரோடு வேளாண் துறை தகவல்

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி விவசாய பகுதிகளில் நஞ்சை  பயிர்களுக்கு சென்ற ஆகஸ்ட் தண்ணீர் திறக்கப்பட்டு இப்பொழுது  அறுவடை பணி  நடைபெற்று வருகிறது, இதனை  தொடர்ந்து புஞ்சை பாசனத்திற்காக பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் விரைவில் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில், புன்ஜை  விவசாய  பகுதிக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் தயார் நிலையில் இருப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனவே, ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள வேளாண் துறை அலுவலகங்களை நேரில் அணுகி, தேவையான விதைகள் மற்றும் உரங்களை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

7,தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது

 புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள தச்சன்குறிச்சியில், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது .

இந்த போட்டியை அமைச்சர் ரகுபதி, மெய்யானதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் துவக்கி வைத்தனர்.

முதலாக கோவில் காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் பின் 425 காளைகள் அவிழ்க்கப்பட்டன,இதில் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டில் 5 ஆம் சுற்றில் பெண் காவலர் உட்பட 52 பேர் காயம் அடைந்துள்ளனர். பலத்த காயமடைந்த 8 பேர் புதுக்கோட்டை  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர், பைக், காட்டில், பீரோ என பல பரிசுகள் வழங்கப்பட்டது.

 

8, அம்பாசமுத்திரத்தில் உள்ளுர்ப்பயிர்களின் கண்காட்சி

 அம்பாசமுத்திரத்தில் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் ,உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி 9.01,2023 இன்று நடைபெற்றது

அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று காலை பத்து மணியளவில் கண்காட்சி தொடங்கப்பட்டது.

இந்த கண்காட்சியில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி பாரம்பரிய உள்ளூர் ரகங்களை காட்சிபடுத்தினர், வேளாண் பல்கலைகழக ஆராய்ச்சிகளை காட்சி படுத்துதல், விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், நாட்டுப்புற நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு கண்காட்சி மற்றும் விற்பனை ஆகியன நடைபெற்றது.

 

9, 50,700 தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி நம்மாழ்வாருக்கு உருவப்படம் வைத்து இளைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்

 

மதியழகன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் நம்மாழ்வாரின் முறைகளை அறிந்தவர், இயற்கை விவசாயத்தில் அவருக்கு நம்மாழ்வார் ஆர்வத்தைத் தூண்டினார்.

கரிம வேளாண்மை அறப்போர்  செய்த நம்மாழ்வாரின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளைக் குறிக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வேளாண் பொறியியல் பட்டதாரியான இவர்  நம்மாழ்வாரின் தமிழ்ச் சொல்லகராதியில் 50,700 சொற்களைப் பயன்படுத்தி நம்மாழ்வாரின் உருவப்படத்தை வரைந்தார்.

இந்த சாதனையை கலாம் உலக சாதனையில் இடம் பெற மாணவரும் விண்ணப்பித்துள்ளார். வேப்பந்தட்டை தொகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கே.மதியழகன் (22), 2022ல் வேளாண் பொறியியல் துறையில் பிஇ முடித்தார். இவரது தாயார் கலைசெல்வி 7 ஏக்கரில் சோளம், பருத்தி, நெல், நிலக்கடலை உள்ளிட்டவற்றை பயிரிட்டு விவசாயம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

10, வானிலை அறிக்கை

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்,வடதமிழகத்தில் உள்  மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் அதிகாலை வேலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது, மீனவர்களுக்காக எச்சரிக்கை எதுவுமில்லை.

மேலும் படிக்க:

பொங்கல் பரிசு ரூ.1,000: தமிழக மக்களுக்கு இன்று முதல் விநியோகம்!

தமிழக அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள உதவும் whatsapp: வழிமுறைகள் உள்ளே!

 

English Summary: Egg price increase Published on: 09 January 2023, 03:11 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.