1. செய்திகள்

பொங்கல் பண்டிகை: மண் பானை உற்பத்தி வளர்ச்சி!

Poonguzhali R
Poonguzhali R
Pongal Festival: Development of earthen pot production!

பொங்கல் பண்டிகையை ஒட்டி திண்டுக்கலில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையினைக் கிராமங்கள் தொடங்கி நகா்புறம் வரை வெகு விமரிசையாக அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கமாக இருக்கிறது. தமிழா்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் (தை மாதம்) மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பண்டிகையில் அரிசி, வெல்லம், நெய் சேர்த்து பானையிலிட்டு பொங்கல் வைத்து சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து விமா்சியைாக கொண்டாடுவது தமிழா்களின் மரபாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களே உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டியில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி அதிகமாக நடைபெற்று வருகின்றது.

மண்ணிலிருந்து பதப்படுத்தி பானை தயாரித்து வண்ணம் தீட்டி விற்பனைக்காகவும் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் கரூர், தேனி, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கும், கேரளா முதலான வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைப்பது வழக்கம். இது மண்பாண்டம் செய்பவர்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது.

வருடம் முழுவதும் பானை தயாரிப்பாளர்கள் மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டாலும் பொங்கல் பண்டிகை, கார்த்திகை திருநாள் போன்ற சமயங்களில்தான் ஓரளவுக்கு வருமானம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. தற்பொழுது உள்ள நாட்களில் மிகவும் தீவிரமாக உழைத்து மண் பாண்டகளைத் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க

ரூ.1550 கோடி: தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கிய அரசு!

Diabetics: சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை உண்ணலாம்! பட்டியல் இதோ!

English Summary: Pongal Festival: Development of earthen pot production! Published on: 09 January 2023, 03:33 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.