1. செய்திகள்

அமேசான் உடன் ICAR புரிந்துணர்வு ஒப்பந்தம்- விவசாயிகளுக்கு என்ன நன்மை?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
ICAR signed a MoU with Amazon Kisan at New delhi

இந்திய விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும், அவர்களது உற்பத்தி பொருட்களை தனது இணையதளம் வாயிலாக சந்தைப்படுத்தும் நோக்கில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) மற்றும் அமேசான் கிசான் நிறுவனத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆன்லைன் முறையில் பொருட்களை விற்பனை செய்வதில் முன்னனி நிறுவனமாக திகழ்வது அமேசான் நிறுவனம். இந்நிறுவனமானது அமேசான் கிசான் என்கிற திட்டத்துடன் இந்தியாவிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அதிகப்பட்ச விளைச்சல் பெறவும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு பயிர்களை பயிர் செய்ய விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் அளிக்க முன்வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ICAR), அமேசான் கிசான் ஆகிய அமைப்புகளுக்கு இடையே நேற்று புதுடெல்லியில் நடைப்பெற்ற நிகழ்வில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு அமைப்புகளுக்கு இடையே கூட்டான பிணைப்பு உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

" ICAR -KVK மற்றும் அமேசான் இடையே புனேயில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னோடித் திட்டத்தின் முடிவுகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள காரணமாக விளங்கியுள்ளது. வேளாண் துறையில் மேற்கொள்ளப்படும் விரிவான ஆராய்ச்சி மூலம் உருவாக்கப்பட்ட துல்லியமான விவசாய நடைமுறைகளை விரிவுபடுத்தவும், விவசாயிகளிடம் முழுமையாக கொண்டு சேர்க்கவும் இந்த ஒப்பந்தம் உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.”

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் என்ன?

அமேசான் நெட்வொர்க் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை ICAR வழங்கும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு பயிர்களின் விளைச்சலை அதிகப்படுத்த உதவும். அமேசான் ஃபிரஷ் உள்ளிட்டவற்றின் மூலமாக நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு உயர்தரமான புதிய உற்பத்திப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

”தொழில்நுட்பங்கள், திறன் கட்டமைப்பு, புதிய தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றில் அமேசானுடன் ICAR ஒத்துழைக்கும் “ என்று இதன் தலைமை இயக்குநரும், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் செயலாளருமான டாக்டர் ஹிமான்ஷு பதக் தெரிவித்தார்.

வேளாண் மற்றும் பருவ கால அடிப்படையிலான சாகுபடி திட்டங்களில் தகவல்கள் கிடைப்பதன் முக்கியத்துவத்தையும், பங்களிப்பையும் அவர் இந்த நிகழ்வின் போது எடுத்துரைத்தார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ICAR சார்பில் டாக்டர் யு.எஸ்.கௌதம், அமேசான் ஃபிரஷ் விநியோகத் தொடர் மற்றும் கிசான் சார்பில் சித்தார்த்த டாடா ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் விவசாயிகளுக்கு அமேசான் நேரடியாக கள பயிற்சி அளிப்பதோடு அவர்களின் உற்பத்திப் பொருட்களை தனது இணையதளம் வாயிலாக சந்தைப்படுத்த கற்றுத்தரும்.

மேலும் உற்பத்தி பொருட்களின் நுகர்வோர்களுடன், விவசாயிகளுக்கு நேரடி தொடர்புகளை ஏற்படுத்தும் எனத் வேளாண் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

ஒரு முறை நட்டு 3 ஆண்டு அறுவடை- பூனைக்காலி சாகுபடி விவரம்!

English Summary: ICAR signed a MoU with Amazon Kisan at New delhi Published on: 10 June 2023, 10:51 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.