1. செய்திகள்

பட்டென்று சரிந்த தக்காளி விலை- மதுரை, திருப்பூர் மார்கெட் நிலவரம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
In Madurai the price of tomatoes fell below Rs 100 per kg

பல வார இடைவெளிக்குப் பிறகு நேற்று மாநிலத்தின் பல பகுதிகளில் தக்காளியின் மொத்த விற்பனை விலை கிலோவுக்கு 100 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது. தக்காளி சாகுபடி அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் காலங்களில் தக்காளி விலை படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக முன்னெப்போதும் இல்லாத வகையில் காய்கறிகளின் விலை பன்மடங்கு அதிகரித்தது. அதிலும் அன்றாட சமையல்களில் பயன்படுத்தப்படும் தக்காளியின் விலையானது கிலோ ஒன்றுக்கு 200 ரூபாயைத் தாண்டி அதிர்ச்சி அளித்த து. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு விலை உயரத் தொடங்கியபோது, ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியைத் தேர்ந்தெடுத்தனர் (அறுவடைக்குத் தயாரான நிலையை அடைய சுமார் 70 நாட்கள் ஆகும்) இதன் விளைவாக, சந்தைகளுக்கு வரத்து தற்போது திடீரென அதிகரித்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். .

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் வரலாறு காணாத வகையில் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனையாகியது. நேற்றைய தினம் தக்காளி விலை ரூ.60 ஆக குறைந்தது. அடுத்த சில நாட்களில் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், ''கடந்த இரண்டு நாட்களில், தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு, 40 டன் தக்காளி வந்தது. இதனால், 15 கிலோ எடையுள்ள தக்காளி 800 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில், இதை 15 கிலோ எடையுள்ள தக்காளி 1,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

பல்லடத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், ''எனது தோட்டத்தில் தக்காளி சாகுபடி செய்து, இரண்டு நாட்களாக நல்ல மகசூல் கிடைத்து வருகிறது. ஆனால் தற்போது தக்காளி கொள்முதல் விலை குறைந்துள்ளது என்றார்.

தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தக்காளி 90 நாள் பயிராகும், சில விவசாயிகள் 70 நாட்களுக்குப் பிறகு அறுவடையைத் தொடங்குகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை தாலுகாக்களில் உள்ள பண்ணைகளில் இருந்து வரத்துகள் வருகிறது. ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி மாவட்டங்களில் இருந்து இன்னும் சப்ளை வரவில்லை என்றார்.

மதுரையில் உள்ள மத்திய மார்க்கெட்டில் முதன் முதலாக 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.2000-க்கு விற்கப்பட்டது. தற்போது வரத்து சீராகி, கிலோவுக்கு 100 ரூபாய்க்கும் கீழ் விலை குறைந்துள்ளது.

திருப்பூர், மதுரை மாவட்டங்களை போலவே தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் தக்காளியின் வரத்து அண்டை மாநிலங்களிலிருந்தும் வரத்தொடங்கியுள்ளது விலை குறையத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை- காவிரி விவகாரத்தில் கடுப்பான துரைமுருகன்

விவசாயிகளின் நம்பிக்கை- விற்பனையில் சாதித்த சோனாலிகா டிராக்டர்

English Summary: In Madurai the price of tomatoes fell below Rs 100 per kg Published on: 07 August 2023, 10:25 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.