1. வெற்றிக் கதைகள்

45 நாட்களில் 50 லட்சம்- தலைகால் புரியாத மகிழ்ச்சியில் தக்காளி விவசாயி

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
A farmer earns 50 lakh in 45 days by selling tomatoes

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் தக்காளி விவசாயி ஒருவர் 45 நாட்களில் 50 லட்சம் வருமானம் ஈட்டி பணக்காரர் ஆகியுள்ளார். தக்காளி விலை உயர்வு நீடிக்கும் நிலையில் விவசாயி காட்டில் பண மழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு போலவே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தக்காளி விலை இன்னும் குறைந்தப்பாடில்லை. பொதுமக்கள் ஒருபுறம் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் இதுவரை இல்லாத அளவிற்கு நல்ல லாபத்தை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தினை சேர்ந்த பீமு பாவ்சிங் லமானி என்கிற விவசாயி 45 நாட்களில் ₹50 லட்சம் வரை தக்காளி விற்றே நிகர லாபம் ஈட்டியுள்ளார். இந்த சீசனில் நான்கு ஏக்கர் நிலத்தில் தக்காளி சாகுபடி செய்து வருகிறார். தற்போதுள்ள விலையே இன்னும் 3 வாரங்களுக்கு நீடித்தால் ₹50 லட்சம் கூடுதல் லாபம் கிடைக்கும் என மகிழ்ச்சியில் உள்ளார் விவசாயி லமானி.

40 வயதான லமானி இதற்கு முன்பு சோளம், திராட்சை, கரும்பு போன்ற பயிர்களை பயிரிட்டு நஷ்டத்தை சந்தித்துள்ளார். இருப்பினும், தக்காளியின் தேவை சந்தைகளில் திடீரென அதிகரித்ததால், லாமணி தக்காளியை பயிரிட்டுள்ளார். எதிர்ப்பார்ப்புகளுக்கு மீறி அதிகமாகவே லாபம் கிடைத்துள்ளதாக விவசாயி லமானி தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து லாமணி கூறுகையில், பருவகால அறுவடையின் போது மட்டும் ₹1 லட்சம் வரை வருமானம் கிடைத்ததாகவும், தற்போது தக்காளி சாகுபடி செய்வதன் மூலம் தினமும் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற விவசாயிகளும் தக்காளியை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள் என தெரிவித்துள்ள லாமணி, தலா 25 கிலோ தக்காளி கொண்ட 150 பெட்டிகளை விஜயப்பூரில் உள்ள வேளாண்மை உற்பத்தி சந்தைப்படுத்தல் கழகத்திற்கு (ஏபிஎம்சி) அனுப்பியதன் மூலம் லட்சக்கணக்கில் லாபம் கிடைத்துள்ளது என்றார்.

25 கிலோ தக்காளி கொண்ட ஒரு பெட்டி அவருக்கு ₹2,500 முதல் ₹3,000 வரை தற்போது லாபம் அளிக்கிறது, இதற்கு முன்பு ₹800 முதல் ₹1,000 வரை மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

லாமணியின் மனைவி கமலாவுடன் சுமார் 25 விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தக்காளியை மட்டுமே பயிரிட்டு வருகின்றனர். விவசாய பண்ணையில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு நாளைக்கு ₹400 வரை கூலி வழங்கப்படுகிறதுகிட்டூர் கர்நாடகா பகுதியில் உள்ள பெலகாவியில் உள்ள விஜயபூர், பாகல்கோட் மற்றும் சிக்கோடி சுற்றியுள்ள பகுதிகள் வறட்சி மற்றும் வறண்ட விவசாய நிலங்களுக்கு பெயர் பெற்றது.

வறண்ட விவசாய நிலம் மற்றும் குறுகிய அறுவடை காலம் காரணமாக, இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் இப்போது தக்காளியை பயிரிட அதிக ஆர்வம் காட்டுவதாக வேளாண் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

சந்திராயன் 3- இன்று முதல் அடுத்த 18 நாட்கள் ரொம்ப முக்கியம்.. ஏன்?

சுதந்திரத் தினத்தன்று சென்னையில் குவியும் விவசாயிகள்- எதற்காக?

English Summary: A farmer earns 50 lakh in 45 days by selling tomatoes Published on: 06 August 2023, 08:37 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.