1. செய்திகள்

விவசாயிகளை விட அதிகம் சம்பாதிப்பது இடைத்தரகர்கள் தான்- முன்னாள் CJI சதாசிவம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
former CJI Sathasivam visit KJ office

விவசாயிக்கும், நுகர்வோருக்கும் இடையே உள்ள இடைத்தரகர்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என முன்னாள் இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், தற்போது முழு நேர விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சதாசிவம் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் கீழ் உச்சபட்ச அதிகாரமிக்க பதவிகளுள் ஒன்றான உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், கேரள மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்தவர் சதாசிவம். இன்று டெல்லியுள்ள கிரிஷி ஜாக்ரான் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து KJ சாப்பலில் நடைப்பெற்ற நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தார்.

க்ரிஷி ஜாக்ரான் ஊடக தலைமை ஆசிரியர் மற்றும் நிறுவனருமான டோம்னிக், சைனி டோம்னிக், SONALIKA குழுவின் தலைமை நிர்வாகி பிமல்குமார், Plant Based Food Industry Association-ன் எக்ஸ்கியூட்டிவ் டைரக்டர் சஞ்சய் சேதி, முன்னாள் DDG (Animal Sciences-ICAR) ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

கிரிஷி ஜாக்ரான் நிறுவனர் டோம்னிக் விருந்தினரை வரவேற்று பேசினார். அதன் தொடர்ச்சியாய் நிகழ்வில் பங்கேற்றிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் முன்னாள் ஆளுநர் சதாசிவம் தனது விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள பயிர்கள், விவசாயிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என விரிவாக பேசினார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு,

முழு நேர விவசாயி:

தனது ஓய்வுக்குப்பின் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முழு நேர விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாக சதாசிவம் தெரிவித்தார். தனது சொந்த கிராமத்தில் சுமார் 30 ஏக்கர் நிலத்தில் கரும்பு, பாக்கு, வாழை, தென்னை மரங்களை பயிரிட்டு உள்ளதாகவும், தனது நிலத்தில் சொட்டு நீர் பாசனம் மற்றும் நவீன வேளாண் யுத்திகளை கடைப்பிடித்து விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். மாட்டுச்சாணம், ஆட்டுச்சாணம் போன்றவற்றை இயற்கை உரங்களாகவும் பயன்படுத்தி வருகிறார். 27*27 என்ற இடைவெளியில் தென்னை மரங்களை நட்டுள்ள நிலையில், ஊடுபயிராக பாக்கினை பயிரிட்டுள்ளார்.

நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் நிலையிலும் சொல்லிக்கொள்ளும் படி வருமானம் இல்லை என்பது தான் உண்மை என்றார். ”எனது தென்னை தோப்பில் விளையும் ஒரு தேங்காயானது அதிகப்பட்சம் 5 முதல் 7 ரூபாய் அளவில் மட்டுமே விலை போகிறது. ஆனால், சந்தையில் ஒரு தேங்காய் மட்டுமே ஏறத்தாழ 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விவசாயிக்கும், நுகர்வோருக்கும் இடையே உள்ள இடைத்தரகர்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள் “ என்றார்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் திட்ட பணியாளர்களை, விவசாய பணியில் ஈடுபடுத்த வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்தார். விவசாய பணிக்கு ஆள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

பிரதமரிடம் கோரிக்கை:

பிரதமர் உடனான சந்திப்பை பகிர்ந்துக்கொண்ட சதாசிவம் தெரிவிக்கையில் , “சமீபத்தில் பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது Modi with seeds, Modi with farmer என்கிற விவசாயத்துறையில் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்த கையேட்டினை எனக்கு வழங்கினார். அப்போது இந்தி, ஆங்கிலம் தவிர்த்து அனைத்து பிராந்திய மொழிகளிலும் இதனை பிரசுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். காரணம், அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைநிலையிலுள்ள விவசாயினை சென்று சேரவில்லை என்பதே உண்மை என பிரதமரிடம் நேரிடையாக எடுத்துரைத்தேன்” என்றார்.

இன்சூரன்ஸ் பிரச்சினை:

எதிர்பாராத காலநிலை மாற்றத்தினால், பயிர்சேதம் ஏற்படுகிறது. தாலுகா அளவிலான அதிகாரிகள் தரும் அறிக்கையினை பொறுத்தே இன்சூரன்ஸ் ஏற்கப்படுகிறது.

சில நேரங்களில் ஒரு சில கிராமங்களில் நிகழும் பலத்த பயிர்சேதத்திற்கு இன்சூரன்ஸ் கிடைக்காமல் போகிறது. எனவே கிராம அளவில், கிராம நிர்வாக அலுவலர் பயிர்சேதம் குறித்து அறிக்கையினை வழங்கவும், அதனை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்கும் வகையில் முன்னெடுப்பு செய்ய வேண்டியது அவசியம் என தனது உரையில் எடுத்துரைத்தார்.

விளைப்பொருட்களின் மதிப்புக்கூட்டலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த சதாசிவம், விளைப்பொருட்களுக்கு உரிய MSP-யினை அரசே தீர்மானித்து அதனை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், மழைக்காலங்களில் பல்வேறு நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பயனற்று போகும் நிலை நீடித்து வரும் நிலையில் அரசு குடோன் வசதியினை மேம்படுத்த வேண்டும் என்றார்.

விதைகள், உரங்கள், டிராக்டர், க்ரஷர் போன்ற வேளாண் பொருட்களை வாங்குவதற்கு அதிகப்பட்சம் 50 சதவீதம் மானியவிலையில் வழங்கினால் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தான் சந்தித்த வழக்குகளும், அதனை கையாண்ட விதமும், அதனால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எடுத்துரைத்தார். இதுத்தொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ள கிரிஷி ஜாக்ரான் இணையதளத்தினை பின் தொடருங்கள்.

மேலும் காண்க:

இறக்குமதி வரியினை 5% குறைத்த அரசு- எண்ணெய் விலை குறையுமா?

English Summary: Intermediaries who earn more than the farmers says former CJI Sathasivam Published on: 16 June 2023, 03:24 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.