1. செய்திகள்

கலைஞர் திட்ட கிராமங்களில் மானிய விலையில் பவர் டில்லர்கள் வழங்குதல்

KJ Staff
KJ Staff
farmer with power tiller

வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், சிறு குறு விவசாயிகள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கென ஒரு பிரிவிலும், இதர விவசாயிகளுக்கு மற்றொரு பிரிவிலும் டிராக்டர், பவர் டில்லர், நாற்று நடும் இயந்திரம், சூழல் கலப்பை, விதை தெளிப்பான், தென்னை மரம் ஏறும் கருவி என விவசாயத்தை எளிமையாக்கும் மேலும் சில கருவிகள் வேளாண் பொறியியல் துறையின் ஒப்புதல் பெற்ற நிறுவனங்களில் மானிய விலையில் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு வேளாண்பொறியியல் துறையின் மூலம், கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் விசை உழுவை இயந்திரம்(tiller ) மானியத்தில் வழங்குதல் திட்டம்(DISTRIBUTION OF POWER TILLER) செயல்படுத்த ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது .

விசை உழுவை இயந்திரம் (DISTRIBUTION OF POWER TILLER) 39 எண்கள் வழங்க ரூ.33.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி விசை உழுவை இயந்திரம் (DISTRIBUTION OF POWER TILLER) சிறு, குறு, மகளிர், SC ,ST விவசாயிகளுக்கு 50% மானியமும் இதர விவசாயிகளுக்கு 40% மானியமும் அதிகபட்சமாக ரூ.85000 என்ற விதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கபடுகிறது .

மேற்படி மானியம் பெற விரும்பும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் 2021-2022 கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள விவசாயிகள் திருப்பத்தூர் உதவி செயற் பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, சிவசக்தி நகர், புதுப்பேட்டை ரோடு, திருப்பத்தூர்-635601(தொலைபேசி எண் 04179 228255) அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை சமர்ப்பித்து முன்னுரிமை அடிப்படையில் மானியம் பெற்று பயனடையுமாறு திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா அவர்கள் தெரிவித்துள்ளார்.

பயன்கள்:

  • பவர் டில்லர் இயந்திரங்கள் பொதுவாக மண்ணைத் சரியாக்கவும், விதைகளை விதைக்கவும், விதைகளை நடவு செய்யவும், உரங்களைப் பரப்பவும் மற்றும் நீர்ப்பாசனம் செய்யவும் உதவுகின்றன. கூடுதலாக, இது பயிர்களை அறுவடை செய்வதற்கும், கதிரடிப்பதற்கும், கொண்டு செல்வதற்கும் உதவுகிறது.
  • இது சுழலும் பண்ணை கருவிகளுடன் சீராக செயல்பட பயன்படுகிறது மற்றும் சிறிய பகுதிகளில் வேலை செய்ய உதவுகிறது.
  • பவர் டில்லர்கள் கரும்பு விவசாயம், நெல் விவசாயம் மற்றும் கோதுமை விவசாயத்திற்கு ஏற்றவை.
  • அவை பெரும்பாலும் பல்நோக்கு டிராக்டர்களாகக் கருதப்படுகின்றன, அவை முதன்மையாக ரோட்டரி உழவு மற்றும் பிற சிறிய விவசாய நடவடிக்கைகளுக்கு நோக்கம் கொண்டவை.

மேலும் படிக்க:

விவசாயிகளுக்கு ரூ.10,000 வரை ஊக்கத்தொகை: உடனே விண்ணப்பிக்கவும்!

ஜல்லிக்கட்டு: காளைகளுக்கு உடற்தகுதி சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்

 

English Summary: Provision of subsidized power tillers in kalaignar project villages Published on: 05 January 2023, 04:05 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.