1. செய்திகள்

யானைக்கு ரூ.12,000 மதிப்பில் செருப்பு, உலகத்திலேயே முதல் முறை

T. Vigneshwaran
T. Vigneshwaran
Sandals For elephant

நெல்லையப்பர் கோவில் யானை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் , யானைக்கு ரூ.12,000 மதிப்பில் தோல் செருப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கால் வலியால் யானை அவதியுறாமல் இருக்க பக்தர்கள் ரூ.12,000 மதிப்புள்ள 4 தோல் செருப்புகளை வழங்கியுள்ளனர்.

திருநெல்வேலி நகர்ப்‌ பகுதியில்‌ உள்ள 2000 ஆண்டுகள்‌ பழமை வாய்ந்த நெல்லையப்பர்‌ கோவில் யானையின் பெயர் காந்திமதி. 13 வயதில் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட இந்த யானைக்கு தற்போது 52 வயது ஆகிறது. இநிலையில் சமீபத்தில் உடல்நலைக்குறைவு காரணமாக யானை பரிசோதித்த மருத்துவ குழுவினர், யானை வயதுக்கேற்ற எடையை விட 300 கிலோ அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் எடையை குறைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்திடம் அறிவுறுத்தினர்.

இதனால் நாள்தோறும்‌ யானையை நடைபயிற்சி அழைத்துச்‌ செல்வது, அதிக இனிப்பு உள்ள கரும்பை குறைவாக கொடுப்பது, நார்ச்சத்து மிகுந்த உணவு அதிகம்‌ கொடுப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது. தொடர்‌ உணவு கட்டுப்பாடு மற்றும்‌ பயிற்சிகளை மெற்கொண்டதில், யானை 6 மாதத்தில்‌ சுமார் 150 கிலோ எடை குறைந்துள்ளது. தற்போது யானை சரியான எடையை அடைந்திருந்தாலும்‌, வயது முதிர்வின்‌ காரணமாக மூட்டு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால்‌ யானை நீண்ட நேரம்‌ நடப்பதற்கும்‌, நிற்பதற்கும்‌ முடியாமல் சிரமப்படுகிறது. எனவே நடக்கும் போது கால் வலி ஏற்படாமல் இருக்க, யானை காந்திமதிக்கு மருத்துவ குணம்‌ வாய்ந்த ரூபாய்‌ 12,000 மதிப்பிலான தோல்‌ செருப்பை செய்த பக்தர்கள்‌ வழங்கியுள்ளனர். மேலும் மூட்டு வலியிலிருந்து தப்பிக்கவும்‌ மருத்துவ குணம் கொண்ட செருப்பு உதவியாக இருக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். தமிழகத்திலேயே நெல்லையப்பர்‌ காந்திமதி அம்மன்‌ கோயில்‌ யானைக்குதான்‌ முதல்‌ முதலாக செருப்பு அணிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

7th Pay Commission: ரூ. 40,000 வரை சம்பளம் அதிகரிக்கும்

English Summary: Sandals worth Rs.12,000 per elephant, a first in the world Published on: 02 July 2022, 06:39 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.