1. செய்திகள்

5 நாட்கள் தொடர் விடுமுறை- TNSTC வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
super notification issued by TNSTC

நாளை முதல் தொடர்ச்சியாக பல நிறுவனங்களுக்கு 5 நாட்கள் விடுமுறை கிடைப்பதால், அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அரசு பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் முடிவெடுத்துள்ளது.

இந்த வார வியாழக்கிழமை (28/09/2023) மிலாடி நபி, சனிக்கிழமை (29/09/2023), ஞயிற்றுக் கிழமை (01/10/2023) மற்றும் (02/10/2023) அன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை அரசு பொது விடுமுறை தினம் என தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுப்பு கிடைப்பதால் பலர் இந்த விடுமுறையினை பயன்படுத்தி சொந்த ஊர் மற்றும் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கூடுதல் பேருந்து இயக்குவது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:

வெளி ஊர்களுக்கும் மற்றும் சுற்றுலா செல்ல திட்டமிடும் பயணிகள் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகளின் கூடுதல் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துக் கழகங்கள் இயக்க திட்டமிட இயலும் மற்றும் பயணிகள் சிரமமின்றி பாதுகாப்பாக திட்டமிட்டபடி பயணிக்கவும் இயலும்.

தற்போது வரை முன்பதிவு வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நேற்றைய தினம் வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள 27/09/2023 அன்று 16,980 பயணிகளும் 29/09/2023 அன்று 14473 பயணிகளும் மற்றும் 03/10/2023 அன்று 7,919 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 27/09/2023 அன்று தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 250 பேருந்துகளும் மற்றும் 29/09/2023 அன்று 450 பேருந்துகளும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி 02/10/2023 அன்று திங்கட்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. திங்கட் கிழமை பயணம் மேற்கொள்வதற்கு நேற்றைய தினம் வரை 17,242 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் tnstc official app மூலமும் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அமனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடி வலைகள் வாங்க 50 % மானியம்

இ-வாடகை: விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் MRK முக்கிய அறிவிப்பு

English Summary: super notification issued by TNSTC for 5 days continuous holiday Published on: 27 September 2023, 11:17 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.