1. செய்திகள்

TNAU: விதை தரப் பரிசோதனை குறித்து ஒரு நாள் கட்டணப் பயிற்சி

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan

விதையின் தரத்தை கண்டறிவதற்கான பின்வரும் விதைப் பரிசோதனை முறைகள் குறித்த ஒரு நாள் கட்டணப் பயிற்சி விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பிரதி ஆங்கில மாதம், 10ம் தேதி அளிக்கப்பட உள்ளது.

  • விதையின் புறத்தூய்மை
  • விதை முளைப்புத்திறன் மற்றும் வீரியம்
  • விதை நலம்
  • துரித முறை விதை பரிசோதனை

பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயப் பெருமக்கள், தொழில் முனைவோர், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் தங்கள் பெயரை கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள அறுவுறுத்தப்படுகிறது.

தொலைபேசி: 0422-6611363, கைபேசி: 97104 10932/94422 10145 பயிற்சி நடைபெறும் இடம்: விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நேரம் : காலை 10 மணி 

2, திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் சிறுதானிய உணவு திருவிழா -2023 மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து பார்வையிட்டார் .

திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் ,உணவு பாதுகாப்பு துரையின் சார்பில் அமைக்கப்பட்ட "சிறுதானிய உணவு திருவிழாவை -2023"(eat right millet mela-2023) மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் அவர்கள் 5.1.2023 அன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.

மாவட்ட  நியமன அலுவலர் டாக்டர்.சு.ரமேஷ் பாபு ,அவர்கள் முன்னிலை வகித்து திட்ட விளக்கவுரையாற்றினார். ஜெகதீஸ்வரி fssa fortification nodal officer அவர்கள்  சிறப்புரையாற்றினார். மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர் ல்.ஸ்டாலின் பாபு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

விழாவை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, இந்த 2023 ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடு சபை அறிவித்ததின் அடிப்படையில் பள்ளி/கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் சிறுதானிய உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் .அனைவரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும் தமிழ்நாட்டில்லயே முதன் முறையாக சிறுதானிய உணவு வகைகள் மற்றும் மருத்துவ பயன்கள் குறித்து "சிறுதானிய மருத்துவம் "(millet medicine) என்ற தலைப்பில் இணையவழி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது .இப்புத்தகத்தை தரவிறக்கம் செய்து அனைவரும் படித்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொண்டார்

3,திருச்சிராப்பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அருகில் ,ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பெரிய

மிளகுபாறை அரசு இயன்முறை மருத்துவமனை வளாகத்தில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேமேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் செயல்பாட்டினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார்.

4, திருநெல்வேலி மாவட்டம் வி .கே.புரத்தில் கரும்பு அறுவடை தீவிரம்

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புறத்தில் 500 ஏக்கரில் விதைக்கப்பட்ட கரும்பு பயிர்களின் அறுவடை மிகவும் மும்முரமாக நடைபெறுகிறது.

விவசாயிகள் கரும்புகளை வெட்டி நியாய விலை கடைகளுக்கும் சந்தைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

46 ஆயிரம் கரும்புகளை அரசு நேரடியாக கொள்முதல் செய்துள்ளது மற்றும்  கரும்பு ஒன்றுக்கு ரூ.33 என்று விலை அமைந்திருப்பதால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி.

5, ஜல்லிக்கட்டு விதிமுறைகள் அறிவித்த தமிழக அரசு

தமிழ் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளின்போது,

  • காளைகளுடன் அதன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல், மாடுபிடி வீரர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழும், போட்டி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.
  • போட்டியில் அதிகபட்சமாக 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்
  • பார்வையாளர்களின் எண்ணிக்கை 150 பேர் அல்லது மொத்த இருக்கையில் பாதியளவு மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • போட்டியில் பங்கேற்கும் காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே மாவட்ட நிர்வாகத்தால் அடையாள அட்டை வழங்கப்படும்.
  • அடையாள அட்டை இல்லாதவர்கள் அரங்கத்திற்குள் நுழைய அனுமதியில்லை.
  • காளைகள் அவிழ்த்து விடப்படும் நேரத்தில் இருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் உடனடியாக அரங்கில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6, தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிறுத்தம் -போராடும் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வருடந்தோறும்  தச்சன்குறிச்சியில் நடக்கும் ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டில் எப்பொழுதும் முதல் நடக்கும் ஜல்லிக்கட்டு ஆகும். இந்த வருடம் ஜனவரி 2 ஆம் நாள் அறிவிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு, நிர்வாக காரணங்களால் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் ஜனவரி 6 அன்று தேதியை ஒத்திவைத்திருந்தது, ஜல்லிக்கட்டு நடத்த பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில், உச்ச நீதிமன்ற வழிமுறைகளை பின்பற்ற வில்லை  என கூறி நேற்று நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டை மீண்டும் மாவட்ட நிர்வாகம் ஒத்திவைத்திருக்கிறது. பாதுகாப்பு நலன் கருதி ஒத்திவைப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார், அந்த ஊர் மக்கள் பின்னர் போராட்டத்தில் இறங்கினர், காவல்துறை குவிக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினரிடம் கேட்கையில், உச்ச நீதி மன்றத்தின் ஜல்லிக்கட்டு விதிமுறைகள் மீறப்பட்டன என்று கூறினார், அனைத்தையும் சரி செய்து ஜனவரி 8 ஜல்லிக்கட்டு நிச்சியம் நடக்கும் என்று கூறியதினால், அனைவரும் களைந்து அங்கிருந்து சென்றனர்.

7, மதுரை அருகே தண்ணீர் வீணாவதை தடுக்க நவீன ஏற்பாடு: விவசாயிகள் புதிய முயற்சி!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலஉரப்பனூர் கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் நெற்பயிர்கள் நட்டு விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது நெற்பயிர்கள் அனைத்தும் நன்கு வளர்ந்து நிற்பதால் அவற்றிக்கு மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ராஜேந்திரன், உடன், தயாளன் மற்றும் பலர் இணைந்து தங்களுக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், நவீன முறையில் மருந்து தெளிக்க திட்டமிட்டு ஏக்கருக்கு 500 ரூபாய் வீதம் செலவு செய்து டிரோன் மூலமாக மருந்து தெளித்து வருகின்றனர். இதனால் நேரம் மற்றும் மருந்து, தண்ணீர் வீணாவதை தடுக்க முடியும் என்கின்றனர், அப்பகுதி மக்கள்.

8, E-nam குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

விவசாயிகள் தங்கள் அருகிலுள்ள வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் தங்கள் விளைபொருட்களை தேசிய அளவில் விற்று பயன் பெற e-nam சந்தையை பயன்படுத்தி நல்ல விலை பெறலாம். e-nam மூலம் விவசாயிகள் வெளிப்படையான விலை, தரத்திற்கான விலை, தேசிய அளவிலான சந்தை. தேசிய சந்தை மதிப்பு மற்றும் தேசிய சந்தை மதிப்பு மற்றும் நேரடியாக வங்கி கணக்குகளில் வரவு போன்ற வசதிகளை பெறலாம். மேலும் விபரங்களுக்கு உங்கள் பகுதி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகங்களை அணுகவும். 

9, உழவர் சந்தை இருக்க உலர்ந்த காய்கறிகள் எதற்கு?

நுகர்வோர் கவனத்திற்கு விவசாயிகளிடமிருந்து நேரடியாக அறுவடை செய்யப்பட்ட பசுமை காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் கிடைக்கும் ஒரே இடம் உழவர் சந்தை அது உங்களது சந்தை, விலையிலும் மலிவாகும். தொடர்புக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் விற்பனைக்குழு செயலாளரை அணுகலாம். சிறிய அளவில் காய்கறிகள் விளைவிக்கும் விவசாயிகள் இடைத்தரகர் இல்லாமல் தங்கள் பொருள்களை நேரடியாக விற்பனை செய்து வருவாய் ஈட்ட வேண்டும் என்ற நல்ல நோக்கில் 1999-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டது உழவர் சந்தைத் திட்டம் என்பது குறிப்பிடதக்கது.

10, தமிழக வேளாண்மை துறை புதிய முயற்சியில்: வேளாண் துறை செயலாளர் சி சமயமூர்த்தி பேட்டி

தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் எதிர்காலத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு பாரம்பரியமாக பருப்பு வகைகள், நிலக்கடலை, முட்டை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு மற்றும் வாழை போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு பெயர் பெற்றுள்ள நிலையில், முருங்கை மற்றும் தினைகளிலும் கவனம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஏழு மண்டலங்களில் வேளாண் செயலாக்கக் குழுக்களுடன் கூடுதலாக கங்கைகொண்டானில் ஒரு மெகா பூங்காவை மாநில அரசு நிறுவுகிறது. "கங்கைகொண்டானில் வசதிகளை அமைக்க பங்குதாரர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், 90% பணிகள் நிறைவடைந்துள்ளன" என்று வேளாண் துறை செயலாளர் சி சமயமூர்த்தி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். உள்நாட்டு நுகர்வில் மாநிலம் தனது முழுத் திறனை எட்டியுள்ளது என்றும், இப்போது விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களில் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

11, அலங்காநல்லூர் ஜல்லிகட்டு பணி தீவிரம்: முகூர்த்தக்கால் நடப்பட்டது

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஜனவரி 6, 2023 முகூர்த்தக்கால் நடப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வழக்கமான பணிகளை தொடங்கியுள்ள நிலையில், போட்டியை நடத்த அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகரிடம் ஊர் கமிட்டி சார்பாக மனு அளிக்கப்பட்டது. அதன்படி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதி நடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

IRCTC: தெற்கு ரயில்வே கொடுத்த மெகா அப்டேட்!

Diabetes Diet: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இந்த காய் சாப்பிடுங்க போதும்!

English Summary: TNAU: One day paid training on seed quality testing Published on: 07 January 2023, 04:09 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.