1. செய்திகள்

உங்கள் பணம் காணாமல் போகும்- SBI எச்சரிக்கை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Your money will be lost- SBI warned!

நீங்கள் செய்யும் இந்தத் தவறால் வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தும் காணாமல் போய்விடும் என்று எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது. இது போன்ற எச்சரிக்கைகளை எஸ்பிஐ வங்கி அடிக்கடி விடுப்பது வாடிக்கையாகி வருகிறது.

ஓடிபி

பொதுத்துறை வங்கிகளில் மிகப் பெரியதாக விளங்குவது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எனப்படுத் பாரத ஸ்டேட் வங்கி. இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வங்கி வாடிக்கையாளர்கள் யாரும் தங்களுடைய ஓடிபி நம்பரை யாரிடமும் பகிரவேண்டாம் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரித்துள்ளது.

பகிரக்கூடாது

OTP என்பது வங்கி விஷயத்தில் மிக முக்கியமான ஒன்று. பணம் அனுப்புவது போன்ற பரிவர்த்தனைகளுக்கு OTP நம்பர் மூலமாகவே உறுதிப்படுத்தும் ஒப்புதல் வழங்கப்படுகிறது.வங்கிக் கணக்கு உள்ள வாடிக்கையாளர் தங்களது கணக்கிலிருந்து யாருக்காவது பணம் அனுப்பும்போதுகூட இந்த OTP கேட்கப்படுகிறது.

இந்த OTP நம்பர் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வங்கி தரப்பிலிருந்து அனுப்பப்படுகிறது. இதை அந்த வாடிக்கையாளர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவரிடம் இதைத் தெரிவிக்கக்கூடாது. இதை மிகவும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

  • ஷேரிங் என்பது கேரிங் கிடையாது எனவும், OTP நம்பரை ஷேர் செய்யக்கூடாது.

  • அதோடு, “என்னை யாரிடமும் ஷேர் செய்ய செய்யக்கூடாது; மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும்; நான் யார்?” என்று கேள்வி கேட்டு, அதற்கு ”OTP" என்ற பதிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்காக இந்த மாதிரியான பதிவுகளை அவ்வப்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு- முழு விபரம்!

தபால் நிலையங்களில் கடலை மிட்டாய் விற்பனை!

English Summary: Your money will be lost- SBI warned! Published on: 04 June 2022, 12:32 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.