1. மற்றவை

இன்றே பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் பெறுங்கள்! விவரம் உள்ளே!

Poonguzhali R
Poonguzhali R
Get a Audhar Card for New Babies Today!

பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் என இரண்டு வகையான ஆதார் அட்டைகள் உள்ளன. குழந்தைகளுக்கு உள்ள ஆதார் பால் ஆதார் என்றும், நீலா ஆதார் என்றும் அழைக்கப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தையின் பெற்றோர், நீல ஆதாரைப் பெறலாம். நீல ஆதார் அட்டைக்குப் பதிவு செய்ய, கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமான ஆதார், அதன் பதிவு செய்யப்பட்ட மில்லியன் கணக்கான பயனர்களுக்கு நிவாரணம் அளிக்கும் புதிய அம்சத்தைச் சமீபத்தில் அறிவித்தது. முழுப்பெயர், நிரந்தர குடியிருப்பு மற்றும் பிறந்த தேதி போன்ற முக்கியத் தகவல்கள் ஆதாரில் உள்ளன. இவை அனைத்தும் UIDAI வழங்கிய தனித்துவமான 12 இலக்க எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஆதார் ஒரு முக்கியமான ஆவணமாகும், ஏனெனில் இது பரந்த அளவிலான துறைகளில் அடையாள சரிபார்ப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு வகையான ஆதார் அட்டைகள் உள்ளன: ஒன்று பெரியவர்களுக்கும் ஒன்று குழந்தைகளுக்கும் என இருக்கின்றது. புதிதாகப் பிறந்த குழந்தையின் பெற்றோர்கள் பால் ஆதாருக்கு விண்ணப்பிக்கலாம்.

நீல ஆதார் அட்டை என்றால் என்ன?
UIDAI இன் படி, நீல ஆதார் அட்டைக்கு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையைச் சேர்க்கக் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரில் ஒருவரின் ஆதார் அட்டை எண் அவசியம்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக பயோமெட்ரிக்ஸ் உருவாக்கப்படாததால், குழந்தையின் நீல நிற ஆதார் தரவு என்பது கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டிருக்கவில்லை. UIDAI பிரதிநிதியின் கூற்றுப்படி, ஒரு குழந்தை ஐந்து வயதை அடைந்தவுடன் பயோமெட்ரிக்ஸ் புதுப்பிக்கப்பட வேண்டும்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, நீல நிற ஆதார் அட்டையில் 12 இலக்க எண்ணும் இருக்கும். குழந்தை ஐந்து வயதை அடைந்தவுடன் இது செல்லுபடி ஆகாது. வேறு ஆதார் அட்டை பெற வேண்டும்.

நீல நிற ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • அருகிலுள்ள ஆதார் அட்டை பதிவு மையத்திற்குச் செல்வதற்கு முன், குழந்தையின் முகவரிச் சான்று மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் சேகரிக்கவும்.
  • பின்னர், பொருந்தினால், ஒரு சந்திப்பை மேற்கொள்ளுங்கள் அல்லது ஆதார் அட்டை பதிவு மையத்திற்குச் செல்லவும்.
  • பதிவு படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • பெற்றோர்கள் தங்கள் சொந்த ஆதார் எண்களை வழங்க வேண்டும்.
  • நீல ஆதார் கார்டுக்கு பதிவு செய்ய மொபைல் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பதிவு மையத்தில், குழந்தையின் புகைப்படம் எடுக்கப்படும்.
  • குழந்தையின் UID (ஆதார் அட்டை எண்) அவரது பெற்றோரின் UID (ஆதார் அட்டை எண்) உடன் இணைக்கப்படும்.
  • பதிவு மையத்தில், அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்படும்.
  • உறுதிப்படுத்திய பிறகு ஒப்புகை சீட்டை சேகரிக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்படும். பதிவு செய்த 60 நாட்களுக்குள் பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை எண் வழங்கப்படும்.

உங்களது குழந்தைகளுக்கான ஆதாரைப் பெற இன்றே விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.

மேலும் படிக்க

5 நாட்கள் போதும்! உங்கள் எடை குறைய!! Diet Chart உள்ளே!?

கோடைக் காலத்தில் விளையும் காய்கறிகள்!

English Summary: Get a Audhar Card for New Babies Today! Details Inside!! Published on: 01 May 2022, 12:25 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.