1. கால்நடை

கோழிக்கான தடுப்பூசி மற்றும் மருந்திடும் போது கவனிக்க வேண்டியவை

Deiva Bindhiya
Deiva Bindhiya
Vaccine for chicken and what to look out for when giving medicine

கோழி முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தி செய்வது பல்வேறு காரணிகளை சார்ந்து இருப்பது குறிப்பிடதக்கது. அவை இனம், கலப்பு, நல்ல கட்டமைப்பு சீரான உணவளித்தல், சுகாதார பராமரிப்பு முதலியனதாகும். அந்த வகையில், கோழிகளுக்கான தடுப்பூசி, உபகாரணங்கள் மற்றும் மருந்திடும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன என்பதை, இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கோழிகளுக்கான தடுப்பூசி

 • சில நாடுகளில் தடுப்பூசி மற்றும் மருந்துகள் அருகிலுள்ள கால்நடை அலுவலகத்தில், இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மருந்துகள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன, வாருங்கள் பார்ப்போம்.
 • நல்ல Thermoflask மற்றும் சிறிதளவு பஞ்சை கொண்டு, சிகிச்சை கொடுக்கலாம்.
 • மருந்தினை வீணாக்காமல் தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். தடுப்பு மருந்துகள் அரசினால் பெரும் செலவில் உற்பத்தியாகிறது என்பது குறிப்பிடதக்கது.
 • தடுப்பூசி மருந்துகளை குறைந்த வெப்பநிலையில் வைத்து, குறிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைத்து அதன் செயல்திறனை பராமரிக்க வேண்டியது கட்டாயமாகும்.

தடுப்பூசியின் போது தேவைப்படும் உபகரணங்கள்:

 • தடுப்பு மருந்துகளை தூக்கி செல்ல போதுமான Thermoflask இருத்தல் அவசியமாகும்.
 • 1.மி.லி இடைவெளி கொண்ட ஒன்று அல்லது இரண்டு நைலான் ஊசி. சிறிய திறனுடைய ஊசி ஏற்புடையது என்பது குறிப்பிடதக்கது.
 • ஊசியின் பாதை அளவு 20 அல்லது 21 மற்றும் 14 அல்லது 15 கோழி தடுப்பூசிக்கு 1-2 செ.மீ. நீளமுடைய சிறிய ஊசி சிறந்ததாகும். ஒரு சில பெரிய மாற்றம் செய்யப்பட்ட ஊசிகள் பறவைகள் அம்மைக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

தடுப்பு மருந்திடும் முன் கவனிக்க வேண்டியவை (Things to look out before  vaccinating hen)

 • தடுப்பூசி, ஊசி மற்றும் மற்ற கொள்கலன்களை சுத்திகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.
 • ஐஸ்துண்டுகளை Thermoflask அடிபுறத்தில் வைத்து, கலனை, பஞ்சினால் ஒரு அடுக்கு வைத்து, அதனை மூடிக்கொள்ள வேண்டும்.
 • தடுப்பு மருந்து சரியாக உள்ளதா அல்லது ஏதேனும் கலப்படமாகி உள்ளதா என சரிபார்ககவும்.
 • தடுப்பு மருந்தினை கரைக்கும் போது வடிநீரை பயன்படுத்தலாம். அல்லது 10 முதல் 15 நிமிடங்கள் சூட வைத்து, பின் குளிர்வித்து கலவையை ஒரு தூய கலனில் எடுத்துக் கொள்ளவும்.
 • சிறிதளவு வடி நீர் மட்டும் சேர்த்து குறிப்பிட்ட அளவு மருந்தினை சுத்திகரிக்கப்பட்ட ஊசியில் எடுத்துக் கொண்டு அதனை சிறிய கலனில் செலுத்த வேண்டும். பின்னர், கலனை நன்றாக கலக்கவும்.
 • மிதமுள்ள வடிநீரை கலக்கும் கலனில் ஊற்ற வேண்டும். அதன் பின்னர், கலக்கப்பட்ட தடுப்பு மருந்தை ஊசியில் எடுத்துக் கொள்ளவும். அதனை கலக்கும் கலனில் மீதமுள்ள வடிநீரில் ஊற்ற வேண்டும். நன்றாக சுத்திகரிக்கப்பட்ட கலக்கியைக் கொண்டு கலக்க வேண்டும்.
 • ஒரு வேளை பறவை அம்மையாயிருப்பின், தேவையான தடுப்பு மருந்தை சுத்தகரிக்கப்பட்ட வெற்று கலனில் (அல்லது) குழாயில் எடுத்துக் கொண்டு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம். இவை வீணான கலப்படத்தையும் மீதமான மருந்து வீணாவதையும் தடுக்கும் என்பது குறிப்பிடதக்கது.
 • தடுப்பு மருந்தினை தெளிக்க கூடாது அவை கோழிகளுக்கு ஆபத்தாக அமைய வாய்ப்புள்ளது.
 • ஊசியை அதன் மூடியோடு எடுத்துக் கொள்ள வேண்டும், ஊசியின் முனையை தடுப்பு மருந்தேற்றிய முன்போ பின்போ தொடக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அசுத்தமான ஊசிகளை சுத்திகரிக்காமல் பயன்படுத்தக்கூடாது என்பதும் நினைவில் கொள்க.
 • பறவைகள் நோயுற்ற அல்லது அசாதாரண நிலையில் உள்ள போது பயன்படுத்தக் கூடாது என்பது குறிப்பிடதக்கது. அவை இயல்பு நிலைக்கு மாறிய பிறகே பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.
 • கவனிக்க வேண்டிய விஷயம், தடுப்பூசி ஒரு நாளுக்கு இருமுறை தரக்கூடாது. அதே நேரம் இரு தடுப்பூசிகளுக்கு இடையே 10 நாட்கள் இடைவெளி இருத்தல் கட்டாயமாகும்.
 • தடுப்பூசியிட்ட பதிவுகள் பதிவேட்டில் குறிப்பிடபட வேண்டும். ஒரு வேளை நாள் தெரியாதிருப்பின் குறிக்கப்பட்டதைப் பார்த்து, தடுப்பு மருந்தை குறுகிய காலத்திற்கு பயன்படுத்தலாம். மருந்து ஒரு பாலிதீன் பையில் வைத்து ஐஸ்  நிரப்பப்பட்ட  Flask ல் வைத்து பராமாரித்தல் நன்மை பயக்கும்.
 • அனைத்து உபகரணங்களும் சோப்பை கொண்டு சுத்தமான நீரினால் கழுவி பின் சூடு நீரில் சுத்திகரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
 • தகுந்த நேரத்தில் பறவைகளுக்கு தடுப்பு மருந்து  அளித்திடுதல் நல்லது.

மேலும் படிக்க:

குப்பைகளை பிரத்தெடுக்கவில்லை என்றால் ரூ. 5000 வரை அபராதம்

அமுதம் திட்டத்தை துவக்கி வைத்தார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

English Summary: Vaccine for chicken and what to look out for when giving medicine Published on: 10 May 2022, 05:46 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.