Krishi Jagran Tamil
Menu Close Menu

உழவுப் பணியில் ஒரு புதிய சகாப்தம் உதயம்

Tuesday, 04 June 2019 05:25 PM

விவசாயத்திற்கு வேலையாட்கள் கிடைப்பதில்லை என்பதுதான் நமது விவசாயிகளின் பெரும் பச்சனையாகும்.அதன் விளைவாக அவர்கள் உடல் சோர்வு மற்றும் மன சோர்வு அடைகின்றார்கள். விவசாய வேலைகள் தாமதப்படுகின்றன. இதனால் பயிர் மகசூல் குறைகின்றது.  விவசாயம் இலாபமற்றதாகி விடுகிறது.

இந்திய விவசாயத்தில் முதல் கட்ட விவசாய வேலைகளை இயந்திர மயமாக்குதல் என்பது தான் இப்பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வாகும். இதற்கு ஏதுவாக கைகளில் பிடித்துக்கொண்டு இயக்கக்கூடிய பண்ணை கருவிகளை, கட்டுப்படியாகும் விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அவைகள் மூலம் விவசாய வேலைகளை குறித்த காலத்தில், அதிக சிரமமின்றி செய்து முடித்திட முடியும்.

வனவியல், பண்ணைக் கருவிகள், தோட்டம் அமைத்தல் ஆகியவைகளில் STIHL உலக ஜாம்பவான் ஆகும். இது பல்வேறு பண்ணைக் கருவிகளை சந்தைப்படுத்தி வருகின்றது அவைகள் மூலம் விவசாய வேலைகளை இயந்திர மயமாக்குதல் என்பது சிறு குறு விவசாயிகளுக்கு இப்போது சாத்தியமாகியுள்ளது.அதன் பயனாக இந்திய விவசாயத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

பவர் டில்லர் பிரிவு கீழ், தரமான டில்லர்களுக்கானத் தேவை அதிகமாகக் காணப்பட்டது. அதை அறிந்த STIHL நிறுவனம் MH 610 & MH 710 என்ற இரண்டு டில்லர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பயனாக இந்திய உழவுப்பணியில் ஒரு புதிய சகாப்தம் உதயமாகியுள்ளது.

நிலத்தை உழுவதற்கு டில்லர்கள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக உள்ளன. நிலத்தை உழுவது என்பது மிகவும் சிரமமான வேலையாகும். குறிப்பாக நிலத்து மண் மிகவும் கடினத்தன்மை கொண்டதாக இருக்கும் போது.

STIHL  பவர் டில்லர்களில் உலகப் புகழ் பெற்ற, அதிநவீன STIHL  யுரோ-வி  இஞ்சின் பொறுத்தப்பட்டுள்ளதால், அவைகளின் அதிக எரிபொருள் திறன், குறைந்த புகை அளவு காணப்படுகின்றன. ஈரக்காற்று வடிகட்டி பொறுத்தப்பட்டிருப்பதால் தூசிகள் இல்லாத சுத்தமான காற்று கார்பரேட்டர்களுக்கு கிடைப்பதால், அவைகள் எல்லா சூழ்நிலைகளிலும் மிகச்சிறப்பாக செயல்படுகின்றன. இதன் தனிச்சிறப்பான ஆயத்தநிலை மின் இயக்கம் காரணமாக நீர் இறைக்கும் பம்புகள் மற்றும் விசைத் தெளிப்பான்களுக்கு இவை சாலச் சிறந்தவைகளாக உள்ளன. இவைகளுக்கு அதிக ஆழம் மற்றும் அதிக அகலம் உழக்கூடிய ஆற்றல் இருப்பதால்,  இடை உளவு, மண்ணைப் புரட்டிப்போடுதல், களை எடுத்தல், மண்ணில் காற்றோட்டம் ஏற்படுத்துதல், நடவு வரிசைகள் போடுதல் போன்ற வேலைகளை நல்ல முறையில் விரைவாகச செய்திட முடிகிறது.

முன்பகுதியை உயர்த்தக்கூடிய கைப்பிடி, வேறு இடங்களுக்க நகர்த்திச்  செல்வதற்கு ஏதுவாக உள்ள சக்கரங்கள், பக்கவாட்டில் மற்றும் செங்குத்து, நிலையில் செயல்படும் கைப்பிடி அமைப்புகள் ஆகியன இதன் கூடுதல் சிறப்பு அம்சங்களாகும். இவைகளை  இயக்குவதும், கையாளுவதும் எளிதாக இருக்கின்றன. இவைகளில் அமைக்கப்பட்டுள்ள எழும் திரோட்டில் அமைப்பு, நம்பகத் தண்மையுள்ள கியர் மற்றும் அமைப்பு, வலிமை வாய்ந்த கியர் பாக்ஸ், பாதுகாப்பான கவச மூடி அமைப்பு ஆகியன மூலம் STIHL  டில்லர்களின் ஒட்டுமொத்த செயல்த்திறன் வெகுவாக மேம்பட்டுள்ளது.

6 குதிரை சக்தி கொண்ட MH 610 மற்றும் 7 குதிரை சக்தி கொண்ட MH710 என்ற இரண்டு மாடல் பவர் டில்லர்கள் STIHL  அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவைகள் நாடெங்கிலுள்ள STIHL விற்பனையாளர்களிடம் கிடைக்கின்றன. இந்த இரண்டு பவர் டில்லர்கள் தயாரிப்பு மூலம், STIHL  தயாரிக்கும் பண்ணை கருவி வகைகள் அதிகரித்துள்ளன. இப்போது பவர் டில்லர்கள் மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு தேவைப்படும் பிரெஷ் கேட்டார்கள், மிஸ்ட்புளோயர்கள், பவர் வீடர்கள், நீர் இறைக்கும் பம்புகள், குழி போடும் ஆக்கர்கள் மற்றும் விசைத்தெளிப்பான்கள் STIHL  நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.

STIHL பவர் டில்லர்கள் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. STIHL  பவர் டில்லர்களை வாங்குவோர்களுக்கென்று ஒரு பரிச போட்டியை STIHL  அறிவித்துள்ளது. இந்தப் பரிசு போட்டியில் வெற்றி பெருகின்றவர்களுக்கு டிவிஎஸ் ஸ்டார் சிட்டி மோட்டர் சைக்கிள் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

STIHL  இந்திய சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருவது மூலம், இந்திய சந்தையில் தனது வளர்ச்சியை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டி வருவது நன்கு தெரிய வருகிறது. இதற்காக பூனே அருகில் சாக்கன் என்ற இடத்தில புதிய தொழிற்சாலை ஒன்றை  STIHL  அமைத்து வருகிறது. இது 2020 ஏப்ரல் மாதத்தில் செயல் படத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விவசாயத்தில் காணப்படும் குறைந்த உற்பத்தித் திறன் தான் பண்ணைத் துன்பங்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். STIHL பண்ணை கருவிகளை பயன்படுத்தி முதல் கட்ட விவசாய வேலைகளை இயந்திர மயமாக்குதல் மூலம் தான் இந்த பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வைக் காண முடியும்.அதன் மூலம் இந்திய விவசாயிகளின் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திட முடியும்.

farmers agriculture STIHL POWER TILLER
English Summary: farm-mechanization/dawn-of-a-new-era-in-tilling

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்திற்கு மழை வாய்ப்பு! - உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா பார்த்துகோங்க!
  2. விவசாயப் பெண்களுக்கு வெள்ளாடுகள் & கறவை மாடுகள் வழங்கும் திட்டம்! - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்!
  3. தொடங்கும் பருவமழை - கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தொடர்பு எண் அறிவிப்பு!
  4. விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 கிடைக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இது வரை 20 லட்சம் பேர் சேர்ப்பு!!
  5. ஆண்டுக்கு ரூ.100 மட்டுமே! - பாதுகாப்பு வாழ்நாள் முழுவதற்கும்!
  6. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு!
  7. நாமக்கல்லில் நவராத்திரியையொட்டி பூக்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு!
  8. விலை உயர்ந்தால் நியாயவிலைக் கடைகளில் வெங்காயம்! - அமைச்சர் காமராஜ் ஐடியா!
  9. வட தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு; விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் கன மழை இருக்கும்!!
  10. மரங்களை அடகு வைத்தால், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்! கேரளாவில் புதிய திட்டம்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.