1. செய்திகள்

சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை!

Poonguzhali R
Poonguzhali R
Rainfall in Chennai is unprecedented in the last 10 years!

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, ஜூன் 20, திங்கட்கிழமை, சென்னை தரமணியில் 11 செ.மீ மழையும், சென்னை விமான நிலையம், ஆலந்தூர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகப் பகுதிகளில் தலா 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.

நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ மழையும், சோழிங்கநல்லூரில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. எம்ஜிஆர் நகர் மற்றும் அயனாவரம் தாலுகா அலுவலகத்தில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: பொறியியல் கலந்தாய்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் உள்ளே!

திங்கள்கிழமையும் சென்னையில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஜூன் 21 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 48.9 மி.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 30.9 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. IMD புள்ளிவிவரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 2016-ம் ஆண்டு சென்னையில் 53.2 மழை பெய்தது.

மேலும் படிக்க: அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! இன்றைய விலை நிலவரம்!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 21 ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று IMD கணித்துள்ளது.

மேலும் படிக்க: 2 ரூபாயில் ரூ. 36,000 பென்ஷன் பெறும் மத்திய அரசின் திட்டம்!

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. ஜூன் 22-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: பெண்களுக்காக அரசு கொடுக்கும் சிறப்புக் கடன்கள்: இன்றே அப்ளை பண்ணுங்க!

சென்னையில் அடுத்த 2 நாட்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது. “சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35˚C மற்றும் 26-27˚C ஆக இருக்கும்” என்று IMD திங்களன்று அதன் புல்லட்டின் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

ஆதார் விவரத்தைப் பாதுகாக்கும் மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்வது எப்படி?

அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிப்பது எப்படி? இன்றே தொடங்குங்கள்!

English Summary: Rainfall in Chennai is unprecedented in the last 10 years! Published on: 22 June 2022, 11:22 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.