தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 4 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அதிகாரிகள் குழிதோண்டி புதைத்தனர். இதனால், மீன் பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள்
ஆப்பிரிக்க கெளுத்தி மீன் என்பவை மனிதர்களுக்கு மட்டுமல்லாது மற்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடிய மீன்கள் ஆகும். இந்த மீன்கள் தன்னுடன் வாழும் மற்ற வகை மீன்களை அழித்துவிடும் திறன் கொண்டவை.
தடை செய்யப்பட்டவை
எனவே தமிழகத்தைப் பொருத்தவரை, தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பது சட்டப்படி குற்றம். இந்த மீன்களை யாரும் வளர்க்க கூடாது என்று மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த மீன்கள் வளர்ப்பு மற்றும் விற்பனையை தடுக்க போலீசார், வருவாய்த்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் தனி குழு ஒன்றை அமைத்து தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோகுலரமனன், தருமபுரி அருகே உள்ள மதிகோண்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு 3 குட்டைகளில் ஆப்பரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்கப்பட்டு வந்தது தெரியவந்தது.
மீன்கள் அழிப்பு
இதனையடுத்து 3 குட்டைகளிலும் தண்ணீரை வெளியேற்றி ஜேசிபி இயந்திரம் மூலம் ஒரு பெரிய பள்ளம் தோண்டி அதில் தடை செய்யப்பட்ட 4 டன் ஆப்பரிகன் கெளுத்தி மீன்களை கொட்டி பிளீச்சிங் பவுடர், மண் போட்டு மூடி அதிகாரிகள் அழித்தனர்.
மேலும் படிக்க...
95 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம்- அதிர்ச்சியில் கூலித்தொழிலாளி!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.5600 சம்பளம்-இதுவும் சூப்பர் பிஸ்னஸ்தான்!
Share your comments