இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் பறவைக் காய்ச்சல் காரணமாக இதுவரை 4.5 லட்சம் பறவைகள் அழைக்கப்பட்டிருப்பதால், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் (Bird flu)
கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா சத்திஸ்கர், குஜராத், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ஹிமாச்சலப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான், தில்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டது
இருந்த போதிலும், ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களே பறவைக் காய்ச்சல் காரணமாகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
நஷ்டத்திற்கு இழப்பீடு (Compensation for loss)
பாதிக்கப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி இதுவரை 4,49,271 பண்ணைப் பறவைகள் பறவைக் காய்ச்சல் காரணமாக அழிக்கப்பட்டன. இதன் காரணமாக பண்ணை பொருட்களின் நுகர்வு குறைந்தது. பண்ணை தொழிலில் உள்ளவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்திருப்பதால், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் அளித்த தகவலின் படி, நமது நாட்டில் ஒரு வருடத்தில் சுமார் 1,655 மில்லியன் டன் சாணம் மாட்டு இனங்களில் இருந்து பெறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான சாணம் உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் (Compost making technology)
தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கோபந்தன் கழிவிலிருந்து வளம் என்னும் திட்டத்தை மத்திய அரசு அரசு தொடங்கியது. மேலும், விலங்கு கழிவுகளில் இருந்து பல்வேறு வகைகளில் உரங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு உருவாக்கியுள்ளது.
இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு அளித்த எழுத்துப்பூர்வமாக பதிலில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யான், தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
பம்ப் செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!
உணவுப் பூங்கா அமைக்க விருப்பமா?அழைக்கிறது மத்திய அரசு!
காங்கேயத்தில் நாளை கால்நடைத் திருவிழா!
Share your comments