1. கால்நடை

வறட்சியில் கால்நடைகளுக்கான 7 சூப்பர் மாற்றுத்தீவனங்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
7 Super Alternative Feeds for Livestock in Drought!
Credit : Business Line

கோடை காலம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் பலவிதப் பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகின்றன.

மனிதர்களுக்கு சர்மப் பிரச்னை என்றால், கால்நடைகளுக்கு அவற்றின் அடிவயிற்றிலேயேக் கைவைக்கும் வகையில் தீவனத் தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்து விடுகின்றன. எனவே இவ்விரு தரப்பினருமே கோடை என்றாலே அச்சம் கொள்கின்றனர்.

மனிதர்கள்கூட கோடையில் இருந்துத் தப்பிக்க இயற்கையான மற்றும் செயற்கையான வழிமுறைகளைப் பின்பற்றிக்கொள்கின்றனர்.

தீவனத் தட்டுப்பாடு (Fodder shortage)

ஆனால் கால்நடைகளைப் பொருத்தவரை, இது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கிறது. குறிப்பாக தீவனத் தட்டுப்பாடு உருவாகி கால்நடைகளை வளர்ப்பவர்கள், தீவனத்திற்காகத் திண்டாடும் நிலை உருவாகிறது.

அப்படியொரு அசாதாரணச் சூல்நிலையில் நீங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க இந்த 7 வறட்சிக்கால மாற்றுத் தீவனங்கள் பெரிதும் உறுதுணையாக இருக்கும். அந்த 7 மாற்றுத் தீவனங்களின் பட்டியல் இதோ!

கல்லிமுலையான்

கல்லிமுலையான் என்று ஒரு கற்றாழை உண்டு.வறட்சிகாலத்தில் மனிதனுக்கும் கால்நடைகளுக்கும் அரிய உணவு. பல மருத்துவக் குணம் கொண்ட கல்லிமுலையான், புற்று நோயை குணப்படுத்தவல்லது.

புளியன்கொட்டை

புளியன்கொட்டை ஒரு சிறந்த புரதம் மிக்க உணவு. கால்நடைகளுக்கு தினமும் உணவில் 100 கிராம் புளியங்கொட்டை மாவு சேர்த்துவந்தால் அவை ஆரோக்கியமாக இருக்கும்.

வெப்பந்தழை (Thermal Leaf)

வெப்பந்தழை கோடைகாலங்களில் நன்கு தழைத்து வளரும். இவற்றை வெட்டிப் போடுவதன்மூலம் வறட்சிக்கு ஏற்ற ஒரு தீவனமாகவும் குடல் பூச்சி நீங்கவும் பயன்படும்.

வாழைக்கன்று (Banana)

வாழையின் பக்க கன்றுகளை வறட்சி காலங்களில் தீவனமாகப் பயன்படுத்தலாம்

மரவள்ளிக்குச்சி (Cassava)

மரவள்ளி குச்சிகளை எடுத்து வந்து தீவனமாகப்யன்படுத்துவதன் மூலம் மாடுகள் நன்றாக இருக்கும். இதில் ஸ்டார்ச் அதிகம் நாம் வருடத்தில் 6 மாதங்கள் வரை இந்த குச்சிகளைத் தீவனமாகப் பயன்படுத்தலாம். கிராமங்களில் இதனை இன்றவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆலமரம் (AlamTree)

ஆலமரம் மற்றும் அத்தி இலைகளைத் தீவனமாகக் கொடுத்து பாதுகாக்க முடியும்.

தென்னை (Coconut)

தென்னை ஓலைகளும், வறட்சி காலத்தில் சிறந்த மாற்றுத் தீவனமாகக் கால்நடைகளுக்குப் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க....

அரசின் இலவச வெள்ளாடு திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் உள்ளே!

பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?

கன்று ஈன்ற மாடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்!

English Summary: 7 Super Alternative Feeds for Livestock in Drought! Published on: 13 April 2021, 10:10 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.