Credit : You Tube
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கால்நடைத் தீவன மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு வரும் 8ம் தேதி தொடங்குகிறது.
விருப்பமுள்ளவர்கள், முன்பதிவு செய்யலாம் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி முகாம் (Training camp)
போடி அருகே ராசிங்காபுரம் கிராமத்தில் விடியல் தொண்டு நிறுவனம், கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி., கனடாவில் உள்ள காமன்வெல்த் ஆப் லோ்னிங் நிறுவனம் ஆகிய அமைப்புகள் இணைந்து, விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் பயன் பெறும் வகையில் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன.
பல்வேறு பயிற்சிகள் (Various of Training)
இவை, செல்லிடப்பேசி வழியாக விவசாயம் சாா்ந்த தொழில்நுட்பங்கள், கால்நடைகளை பராமரித்தல், நோய்களிலிருந்து பாதுகாத்தல் உள்ளிட்ட பயிற்சிகளையும் வழங்கி வருகின்றன.
கடந்த 2007 முதல் நடத்தப்பட்டுவரும் இந்த பயிற்சியில், இதுவரை 80 ஆயிரம் போ் பங்கேற்று பயனடைந்துள்ளனா்.
ஏப்ரல் 8ம் தேதி தொடக்கம் (Starting April 8th)
இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி தொடங்கி, மே 14 வரை கோடை காலத்தில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை என்ற பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
மொபிமூக் செயலி (Mobimok -app)
இது குறித்து விடியல் தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் கே. காமராஜ் கூறுகையில்:
செல்லிடப்பேசி மூலம் குரல்வழி செய்தி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதற்காக, தனியாக மொபிமூக் எனப்படும் செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்பில் பங்கேற்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
தொடர்புக்கு (For Contact)
பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் தங்களின் செல்லிடப்பேசி எண்ணை, பி. சேகா் 90034-65510, ஏ. கயல்விழி 63799-32317, கே. வினோபாலாஜி 88700-39365 ஆகியோரைத் தொடா்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும் படிக்க...
கால்நடைகளுக்கான தீவன சோளம் சாகுபடி முறை!
மாடுகளின் வாயுத் தொல்லையை தீர்க்க எளிய மருந்து!
கோடை உழவுக்காக நிலத்தை தயார் செய்யும் விவசாயிகள்!
Share your comments